கோலிவுட்டில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி ‘ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா’ போன்ற வேற லெவல் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘திருப்பதி பிரதர்ஸ் ஃபிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட்’ மூலம் ‘தீபாவளி, வழக்கு எண் : 18/9, கும்கி, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை’ போன்ற தரமான படங்களை தயாரித்திருக்கிறார்.
லிங்குசாமி தயாரிப்பில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து 2015-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘உத்தம வில்லன்’. நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்த இந்த படம் படு தோல்வியடைந்தது. இந்நிலையில், நேற்று பிரபல யூடியூப் சேனலான ‘வலை பேச்சு’வில் ‘உத்தம வில்லன்’ லாபகரமான படம் என்று லிங்குசாமியே சொன்னதாக கூறப்பட்டது.

தற்போது, இது குறித்து ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “உலக திரை ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். ‘தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன்’ போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம்தான் பத்மஸ்ரீ திரு.கமலஹாசன் அவர்களை வைத்து FIRST COPY (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான ‘உத்தம வில்லன்’ எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும்.
இது திரு.கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து, தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
அதற்குண்டான வேலைகளில் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சமூக வலைத்தளமான ‘வலை பேச்சு’ என்கிற யூடியூப் சேனலில் ‘உத்தம வில்லன்’ மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு.லிங்குசாமி கூறியதாக இன்று (17.04.2024) தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]