Home Cinema News ‘அஞ்சலி’ டு ‘காக்கா முட்டை’… குழந்தைகளை மையமாக வைத்து வெளியான தமிழ் படங்களின்  லிஸ்ட்!

‘அஞ்சலி’ டு ‘காக்கா முட்டை’… குழந்தைகளை மையமாக வைத்து வெளியான தமிழ் படங்களின்  லிஸ்ட்!

கிட்ஸை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்படுகிறது. அப்படி தமிழ்ல குழந்தைகளுக்கான படங்கள் நிறைய வெளி வந்திருக்கிறது.

by Sivaanantham RB

ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் படங்களை போல் கிட்ஸை மையமாக வைத்து அவர்களை டார்கெட் செய்தும் பல படங்கள் எடுக்கப்படுகிறது. அப்படி தமிழ்ல குழந்தைகளுக்கான படங்கள் நிறைய வெளி வந்திருக்கிறது. அதில் டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

அஞ்சலி

tnm import sites default files Anjali tamil movie 1200

1990-ல் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் ‘அஞ்சலி‘. இதில் ஷாமிலி, தருண், ஸ்ருதி, ரகுவரன், ரேவதி, பிரபு, சரண்யா, வி.கே.ராமசாமி, சாருஹாசன், ஜனகராஜ், சார்லி, தியாகு, ஆனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ‘சுஜாதா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8.2/10. இப்படத்தை ‘அமேசான் ப்ரைம்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

To watch Full movie click here

பசங்க

Pasanga Tamil 2009 20200620121258 500x500 1 edited

2009-ல் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பசங்க‘. இதில் கிஷோர், ஸ்ரீராம், தமிழ், விமல், வேகா தமோடியா, ஜெயப்பிரகாஷ், தாரணி, முருகேஷ், கார்த்திக் ராஜா, சிவக்குமார், சுஜாதா சிவக்குமார், செந்தில் குமாரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குநர் சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இதற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 7.7/10. இப்படத்தை ‘அமேசான் ப்ரைம்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

மெரினா

1000035941 h edited

2012-ல் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் தனது ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து, இயக்கி வெளியான படம் ‘மெரினா’. இதில் தமிழ், சிவகார்த்திகேயன், ஓவியா, கெளதம் புருஷோத், ஜித்தன் மோகன், ஜெயா ஸ்ரீ, சுந்தர்ராஜன், செந்தில் குமாரி, சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு கிரீஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 5.7/10. இப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

சைவம்

maxresdefault 7 edited

2014-ல் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் தனது ‘திங் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்து, இயக்கி வெளியான படம் ‘சைவம்‘. இதில் சாரா அர்ஜுன், நாசர், லுத்ஃபுதீன் பாட்ஷா, துவாரா தேசாயி, சுரேஷ், சண்முகராஜன், வித்யா பிரதீப், ஜார்ஜ் மரியன், கல்யாணி நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 6.8/10. இப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

காக்கா முட்டை

1000070415 h edited

2014-ல் பிரபல இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘காக்கா முட்டை‘. இதில் விக்னேஷ், ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், பாபு ஆண்டனி, ஷாந்தி மணி, ஜோ மல்லூரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 8.3/10. இப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.