Home Cinema News ‘சூர்யவம்சம்’ டு ‘மாயாண்டி குடும்பத்தார்’… தமிழில் பார்த்து ரசிக்க வேண்டிய குடும்ப திரைப்படங்களின் லிஸ்ட்!

‘சூர்யவம்சம்’ டு ‘மாயாண்டி குடும்பத்தார்’… தமிழில் பார்த்து ரசிக்க வேண்டிய குடும்ப திரைப்படங்களின் லிஸ்ட்!

சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களின் ஃபேவரைட் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வருகிற மக்களவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளனர். அவர்களின் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.

by Santhiya Lakshmi

என்னதான் ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் படங்களை பார்த்து நாம ரசிச்சாலும், குடும்ப படங்கள் பார்க்கும்போது தான் நம்ம ஃபேமிலியோட கனெக்ட் பண்ணி பார்க்க முடியும். அப்படி தமிழ்ல நிறைய நல்ல குடும்ப படங்கள் வெளி வந்திருக்கிறது. அதில் டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ…

சூர்யவம்சம்

vikatan 2021 06 a546f6f7 8473 4216 95d0 369884b01804 Cover Image 2021 06 27T110240 443

1997-ல் நடிகர் சரத்குமார் – இயக்குநர் விக்ரமன் கூட்டணியில் வெளியான படம் ‘சூர்யவம்சம்’. இதில் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், பிரியாராமன், மணிவண்ணன், ஆனந்தராஜ், ஆர்.சுந்தர்ராஜன், அஜய்ரத்னம், நிழல்கள் ரவி, ஜெய் கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 7.7/10. இப்படத்தை ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

ஆனந்தம்

1621945851343

2001-ல் நடிகர் மம்மூட்டி – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியான படம் ‘ஆனந்தம்’. இதில் மம்மூட்டிக்கு ஜோடியாக தேவயானி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் முரளி, சினேகா, அப்பாஸ், ரம்பா, ஷியாம் கணேஷ், டெல்லி கணேஷ், விஜயகுமார், ஸ்ரீவித்யா, இளவரசு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 7.1/10. இப்படத்தை ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

வானத்தைப்போல

maxresdefault 5

2000-ல் நடிகர் விஜயகாந்த் – இயக்குநர் விக்ரமன் கூட்டணியில் வெளியான படம் ‘வானத்தைப்போல’. இதில் விஜயகாந்துக்கு ஜோடியாக மீனா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு தேவா, கௌசல்யா, செந்தில், ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், தேவன், அஞ்சு அரவிந்த், எஸ்.என்.லக்ஷ்மி, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 7/10. இப்படத்தை ‘ராஜ் டிஜிட்டல்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

சமுத்திரம்

maxresdefault 6

2001-ல் நடிகர் சரத்குமார் – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் வெளியான படம் ‘சமுத்திரம்’. இதில் சரத்குமாருக்கு ஜோடியாக அபிராமி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் முரளி, காவேரி, மனோஜ் பாரதிராஜா, கவுண்டமணி, செந்தில், சிந்து மேனன், மோனல், ஆகாஷ், பிரமிட் நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 6.7/10. இப்படத்தை ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

மாயாண்டி குடும்பத்தார்

1999477 8

2009-ல் இயக்குநர் இராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. இதில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் மணிவண்ணன், சீமான், பொன்வண்ணன், ஜெகன்நாத், ஜி.எம்.குமார், தருண் கோபி, நந்தா பெரியசாமி, ரவி மரியா, ராஜ்கபூர், சிங்கம்புலி, இளவரசு, மயில்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை ‘யுனைடெட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கான IMDB ரேட்டிங் 7.9/10. இப்படத்தை ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் பார்த்து ரசிங்க.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.