Home Cinema News ரஜினி டு கார்த்தி… கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் சொத்து மதிப்பு  எவ்வளவு தெரியுமா?

ரஜினி டு கார்த்தி… கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் சொத்து மதிப்பு  எவ்வளவு தெரியுமா?

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜித், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்

rajinikanth net worth

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு ரூ.450 கோடியாம். இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார்.  ‘லால் சலாம்’-க்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ன் கைவசம் ‘வேட்டையன்’ மற்றும் ‘தலைவர் 171’ என இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் ‘ஜெய் பீம்’ புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கவிருக்கிறது. 

‘உலக நாயகன்’ கமல்ஹாசன்

kamalhaasan net worth edited

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.570 கோடியாம். இவர் ஆக்ஷன் அவதாரம் எடுத்து கடைசியாக வெளியாகி வேற லெவல் ஹிட்டான படம் ‘விக்ரம்’. இந்த படத்தை 2K கிட்ஸின் ஃபேவரைட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ‘விக்ரம்’-க்கு பிறகு கமல்ஹாசன் கைவசம் தமிழில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2 & 3’, மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’, ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு இயக்கும் படம் மற்றும் தெலுங்கில் நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898 AD’ ஆகிய படங்கள் உள்ளது.

‘தளபதி’ விஜய்

vijay net worth edited

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.600 கோடியாம். இவரின் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்‘ன் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு ‘தளபதி 69‘ஐ ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு’ போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

‘தல’ அஜித்

ajith net worth edited 1

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித்தின் சொத்து மதிப்பு ரூ.350 கோடியாம். இப்போது இவர் கைவசம் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘விடாமுயற்சி’ படத்தை இயக்குநர் மகிழ் திருமேனியும், ‘குட் பேட் அக்லி‘ படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி கொண்டிருக்கிறார்கள். ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்  முடிவடைந்ததும் ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு துவங்குமாம்.

சூர்யா

suriya net worth

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ.300 கோடியாம். இப்போது இவர் கைவசம் ‘கங்குவா, வாடிவாசல்’, இயக்குநர் சுதா கொங்கராவின் படம் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படம் என நான்கு படங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் ‘கங்குவா’ படத்தை இயக்குநர் சிவாவும், ‘வாடிவாசல்’ படத்தை இயக்குநர் வெற்றிமாறனும் இயக்குகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கை வருகிற மே மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளனர்.

தனுஷ்

220715 dhanush mn 1125 5952c6 edited

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷின் சொத்து மதிப்பு ரூ.223 கோடியாம். இந்த ஆண்டு (2024) பொங்கலுக்கு இவர் கடைசியாக நடித்த ‘கேப்டன் மில்லர்’ வெளியானது. தற்போது, தனுஷ் கைவசம் ‘ராயன்’, ‘குபேரா’, ‘தேரே இஷ்க் மெய்ன்’, ‘இளையராஜா’ பயோபிக் ஆகிய படங்கள் உள்ளது. இதில் தனுஷே இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இது தவிர இளம் நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் தனுஷ் இயக்கி கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

sivakarthikeyan 1648536042010 1648536062002 edited

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு ரூ.147 கோடியாம். இந்த ஆண்டு (2024) பொங்கலுக்கு இவர் கடைசியாக நடித்த ‘அயலான்’ வெளியானது. தற்போது, சிவகார்த்திகேயன் கைவசம் ‘அமரன்’, அயலான் பார்ட் 2′, ‘SK 23’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ‘SK 23’ படத்தை டாப் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

TNIE import 2019 3 26 original Vijay Sethupathi

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு ரூ.140 கோடியாம். இந்த ஆண்டு (2024) பொங்கலுக்கு இவர் கடைசியாக நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ வெளியானது. தற்போது, விஜய் சேதுபதி கைவசம் பல படங்கள் இருக்கிறது. அதில் ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கும் படங்கள் ‘விடுதலை பார்ட் 2’ மற்றும் ‘மகாராஜா’. வெற்றிமாறன் இயக்கி கொண்டிருக்கும் ‘விடுதலை பார்ட் 2’வின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கும் ‘மகாராஜா’வின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

‘சீயான்’ விக்ரம்

1064608 vikram

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரமின் சொத்து மதிப்பு ரூ.150 கோடியாம். கடந்த ஆண்டு (2023) இவர் கடைசியாக நடித்த ‘பொன்னியின் செல்வன் பார்ட்2’ வெளியானது. தற்போது, விக்ரம் கைவசம் ‘தங்கலான்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சீயான் 62’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் இயக்குநர் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தின் வெளியீட்டு தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படுமாம். இயக்குநர் அருண் குமாரின் ‘சீயான் 62’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கார்த்தி

Snapinsta.app 424472841 356836633853637 4104814364226408384 n 1080 edited 1

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தியின் சொத்து மதிப்பு ரூ.110 கோடியாம்.  கடந்த ஆண்டு (2023) இவர் கடைசியாக நடித்த ‘ஜப்பான்’ வெளியானது. தற்போது, கார்த்தி ‘சூது கவ்வும்’ இயக்குநர் நலன் குமரசாமி மற்றும் ’96’ இயக்குநர் பிரேம் குமார் இருவரும் இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர ‘கைதி’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய இரண்டு படங்களின் பார்ட் 2-வும்  கைவசம் வைத்திருக்கிறார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.