கோலிவுட்டில் பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது திரைப்படங்களில் சிறப்பாக நடித்து தொடந்து மக்களை எண்டர்டெயின் செய்து வருகிறார்கள். இப்போது சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களின் ஃபேவரைட் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வருகிற மக்களவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளனர். அவர்களின் லிஸ்ட் இதோ..
நடிகர் கமல்ஹாசன்

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் கைவசம் தமிழில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2 & 3′, மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’, ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு இயக்கும் படம் மற்றும் தெலுங்கில் நாக் அஷ்வின் இயக்கும் ‘கல்கி 2898 AD‘ ஆகிய படங்கள் உள்ளது. தற்போது, நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகை கௌதமி

கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான கௌதமி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘பாபநாசம்’. ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இப்பொது கெளதமி கைவசம் விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ படம் மட்டும் உள்ளது. இந்நிலையில், நடிகை கெளதமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகை விந்தியா

கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விந்தியா. இவர் ‘சங்கமம், திருநெல்வேலி, என் புருஷன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, சார்லி சாப்ளின், ரெட்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகை காயத்ரி ரகுராம்

கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காயத்ரி ரகுராம். இவர் ‘சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை, அருவம்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகர் செந்தில்

கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘லால் சலாம்’. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த இந்த படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். தற்போது, நடிகர் செந்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகர் கருணாஸ்

கோலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கருணாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ரெபல்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை நிகேஷ்.ஆர்.எஸ் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது, நடிகர் கருணாஸ் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நடிகர் போஸ் வெங்கட்

கோலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் போஸ் வெங்கட். இவர் இயக்கி வரும் புதிய படமான ‘மா.பொ.சி’யின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக விமல் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது, நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]