Home Cinema News கோலிவுட்டில் திரைப்படங்கள் இயக்கி மாஸ் காட்டிய பெண் இயக்குநர்களின் லிஸ்ட்!

கோலிவுட்டில் திரைப்படங்கள் இயக்கி மாஸ் காட்டிய பெண் இயக்குநர்களின் லிஸ்ட்!

கோலிவுட்டில் பல பெண் இயக்குநர்களும் கதை-திரைக்கதை-வசனம் எழுதி படங்களை இயக்கி ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.

by Sivaanantham RB

சுதா கொங்கரா

909566

மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய முதல் படம் ‘துரோகி’. இதில் ஸ்ரீகாந்த் – விஷ்ணு விஷால் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பிறகு சுதா கொங்கரா, மாதவனின் ‘இறுதிச்சுற்று’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஆகிய வெற்றிப் படங்களையும், ‘பாவக் கதைகள்’ எனும் ஆந்தாலஜி படத்தில் ‘தங்கம்’ கதையையும், ‘புத்தம் புதுக் காலை’ எனும் ஆந்தாலஜி படத்தில் ‘இளமை இதோ இதோ’ கதையையும் இயக்கினார்.  

ஹலிதா ஷமீம்

halitha shameem 1594296546

புஷ்கர் – காயத்ரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கிய முதல் படம் ‘பூவரசம் பீப்பி’. இந்த படத்துக்கு பிறகு ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’, ‘புத்தம் புதுக் காலை விடியாதா’ எனும் ஆந்தாலஜி சீரிஸில் ‘Loners’ எபிசோடையும் இயக்கினார். இதில் ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Snapinsta.app 324707926 936427187343411 4916086071808231499 n 1080 edited 2

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளும், பெண் இயக்குநருமான ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் ‘3’. இதில் தனுஷ் – ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பிறகு கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’, ‘சினிமா வீரன்’ (ஆவணப்படம்), விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடித்த ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கினார். இதில் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்திருந்தார். 

கிருத்திகா உதயநிதி

Snapinsta.app 298230486 183237737423537 1720784492884016927 n 1080 edited

கோலிவுட்டின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், பெண் இயக்குநருமான கிருத்திகா இயக்கிய முதல் படம் ‘வணக்கம் சென்னை’. இதில் ‘மிர்ச்சி’ சிவா – ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனியின் ‘காளி’, காளிதாஸ் ஜெயராமின் ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸையும் இயக்கினார். இப்போது கிருத்திகா ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

நந்தினி.ஜே.எஸ்

MV5BOGUyYzY5ZWYtYzA1Yi00YjRlLThjNDUtZmEyZThjMTNlZGZjXkEyXkFqcGdeQXVyNjg5ODQxNjY@. V1

பெண் இயக்குநர் நந்தினி ஜே.எஸ் இயக்கிய முதல் படம் ‘திரு திரு துறு துறு’. இதில் அஜ்மல் – ரூபா மஞ்சரி ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பிறகு ‘நிலா நிலா ஓடி வா’ மற்றும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கினார். இதில் ‘நிலா நிலா ஓடி வா’ சீரிஸில் அஷ்வின் ககுமனு – சுனைனா ஜோடியாக நடித்திருந்தார்கள். ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ சீரிஸில் நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்னம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.