டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலக அளவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. பொதுவாக இந்த கான்செப்ட்டில் உருவாகும் கதையின் ஹீரோவுக்கு ஒரே நாள் ரிப்பீட்டாகி நடந்த சம்பவங்கள் மீண்டும் நடக்கும். ஹீரோ எப்படி அந்த நாளை கடந்து சென்றார்? என்பதை தான் சுவாரஸ்யமான திரைக்கதையாக்கியிருப்பார்கள். தமிழில் டைம் லூப் கான்செப்ட்டில் சில படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. அதன் லிஸ்ட் இதோ…
1.மாநாடு :

டைம் லூப் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2021-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாநாடு’. இதில் ஹீரோவாக சிலம்பரசன் நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்தார்.
இந்த படத்துக்கு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி, இயக்கியிருந்தார் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு. இப்படத்தில் வில்லனாக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ஹைலைட்டாக அமைந்தது.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்தது. இந்த படம் தமிழ் ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
Click To Watch Maanaadu
2.கேம் ஓவர் :

டைம் லூப் கான்செப்ட்டை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கேம் ஓவர்’. இதில் ஹீரோயினாக டாப்சி நடித்திருந்தார்.
இந்த படத்துக்கு காவ்யா ராம்குமாருடன் சேர்ந்து கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருந்தார் ‘மாயா’ புகழ் அஷ்வின் சரவணன். இதில் மிக முக்கிய ரோல்களில் வினோதினி வைத்தியநாதன், அனிஷ் குருவில்லா, சஞ்சனா நடராஜன், ரம்யா சுப்பிரமணியம், பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதற்கு ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருந்தார், ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.
Click To Watch Game Over
3.ஜாங்கோ :

டைம் லூப் கான்செப்ட்டை வைத்து 2021-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘ஜாங்கோ’. இதில் ஹீரோவாக சதீஷ் குமார் என்பவர் நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருந்தார்.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ஹரீஷ் பெராடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், தீபா ஷங்கர், அனிதா சம்பத் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனை சி.வி.குமாரின் ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘சென் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இதற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார், கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவு செய்திருந்தார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
4.ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் :

டைம் லூப் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’. இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா ஷெட்டி நடித்திருந்தார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் பிந்து மாதவி, பகவதி பெருமாள், நாசர், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, ஸ்ரீரஞ்சனி, ஆடுகளம் நரேன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை பிரபல இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருந்தார். இதற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார், ராஜாமுகமது படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
Click To Watch Oru Kanniyum Moonu Kalavaanikalum
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]