டைம் டிராவல் கான்செப்ட்டை மையமாக வைத்து ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலக அளவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. பொதுவாக இந்த கான்செப்ட்டில் உருவாகும் கதையின் ஹீரோவுக்கு ஒரு டைம் மெஷின் கிடைக்கும், அதை வைத்து நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு சென்று, ஏற்கனவே தனது வாழ்க்கையில் நடந்த ஒரு தவறான சம்பவத்தை மாற்ற நினைப்பார். ஹீரோ மாற்ற நினைத்தது என்ன சம்பவம்? அதை எப்படி மாற்றினார்? என்பதை தான் சுவாரஸ்யமான திரைக்கதையாக்கியிருப்பார்கள். தமிழில் டைம் டிராவல் கான்செப்ட்டில் சில படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. அதன் லிஸ்ட் இதோ…
1.இன்று நேற்று நாளை :

டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இந்த படத்துக்கு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி, இயக்கியிருந்தார் ரவிக்குமார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கருணாகரன், டி.எம்.கார்த்திக், ரவி ஷங்கர், ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார், வி.எஸ்.ராகவன், சாய் தீனா, ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
Click To Watch Indru Netru Naalai
2.24 :

டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ’24’. இதில் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தை ‘யாவரும் நலம்’ புகழ் விக்ரம் குமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் சூர்யா மூன்று வித்தியாசமான ரோல்களில் அசத்தியிருந்தார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் மற்றும் சமந்தா நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
Click To Watch 24
3.டிக்கிலோனா :

டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2021-ஆம் ஆண்டு வெளியான படம் ‘டிக்கிலோனா’. இதில் ஹீரோவாக சந்தானம் நடித்திருந்தார். இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஷிரின் மற்றும் அனகா நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஹர்பஜன் சிங், முனிஷ்காந்த், யோகி பாபு, அருண் அலெக்ஸாண்டர், ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், மாறன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தனர்.
Click To Watch Dikkiloona
4.கணம் :

டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கணம்’. இதில் ஹீரோவாக ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த் நடித்திருந்தார். இந்த படத்துக்கு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி, இயக்கியிருந்தார் ஸ்ரீ கார்த்திக். இப்படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நாசர், அமலா, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
Click To Watch Kanam
5.ரிப்பீட் ஷூ :

டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ரிப்பீட் ஷூ’. இதில் ஹீரோவாக யோகி பாபு நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் கல்யாண் இயக்கியிருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் ப்ரியா கல்யாண், திலீபன், ரெடின் கிங்ஸ்லி, ஆண்டனி தாஸ், KPY பாலா, ஜார்ஜ் விஜய், செம்மலர் அன்னம் ஆகியோர் நடித்திருந்தனர்.
Click to Watch Repeat Shoe
6.மார்க் ஆண்டனி :

டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து தமிழில் 2023-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இதில் ஹீரோவாக ‘புரட்சி தளபதி’ விஷால் நடித்திருந்தார். இந்த படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இப்படத்தில் வில்லனாக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ஹைலைட்டாக அமைந்தது. மேலும், மிக முக்கிய ரோல்களில் செல்வராகவன், ரித்து வர்மா, சுனில், அபிநயா, நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
Click To Watch Mark Antony
‘The GOAT’ டு ‘கல்கி 2898 AD’… கோலிவுட்டில் ரெடியாகி வரும் SCI-FI ஜானர் படங்கள்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]