Home Cinema News ‘அரண்மனை 4’ டு ‘பிசாசு 2’… கோலிவுட்டில் ரெடியாகி வரும் HORROR ஜானர் படங்கள்!

‘அரண்மனை 4’ டு ‘பிசாசு 2’… கோலிவுட்டில் ரெடியாகி வரும் HORROR ஜானர் படங்கள்!

ஹாரர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்காக, இப்போது கோலிவுட்டில் இந்த ஜானரில் ரெடியாகி வரும் படங்களின் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.

by Naveen Dhayalan


‘த்ரில்லர், காமெடி, ஆக்ஷன், சயின்ஸ்-ஃபிக்ஷன்’ என ஒவ்வொரு ஜானர் படங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுபோல் ஹாரர் ஜானர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களும் உண்டு. இப்போது கோலிவுட்டில் ரெடியாகி வரும் ஹாரர் ஜானர் படங்களின் லிஸ்ட் இதோ..

அரண்மனை 4

 list of upcoming horror movies in tamil

கோலிவுட்டின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய ஹாரர் ஜானர் படம் தான் ‘அரண்மனை 4’. இதில் பேயாக வந்து ஆடியன்ஸை மிரட்டப்போகிறவர் நடிகை தமன்னாவாம். மேலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், டெல்லி கணேஷ், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

டிமான்ட்டி காலனி 2

 list of upcoming horror movies in tamil

கோலிவுட்டின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான அருள்நிதி நடித்திருக்கும் புதிய ஹாரர் ஜானர் படம் தான் ‘டிமான்ட்டி காலனி 2’. வேற லெவல் ஹிட்டான இதன் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். இதில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் ப்ரியா பவானி ஷங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாக்ஷி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்தம்

Sadtham

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான ஆதி நடித்திருக்கும் புதிய ஹாரர் ஜானர் படம் தான் ‘சப்தம்‘. இந்த படத்தை ‘ஈரம்’ புகழ் இயக்குநர் அறிவழகன் இயக்கி வருகிறார். இதில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு தமன் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13

13

கோலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய ஹாரர் ஜானர் படம் தான் ’13’. இந்த படத்தை இயக்குநர் கே.விவேக் இயக்கியிருக்கிறார். இதில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் கெளதம் வாசுதேவ் மேனன், ஆதித்யா கதிர், ஆத்யா பிரசாத், பாவ்யா த்ரிகா, ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார்  இசையமைத்திருக்கிறார். இதனை ‘மெட்ராஸ் ஸ்டுடியோஸ் – அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசாசு 2

Pisasu 2

கோலிவுட்டின் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவரான ஆண்ட்ரியா நடித்திருக்கும் புதிய ஹாரர் ஜானர் படம் தான் ‘பிசாசு 2’. இந்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதனை டி.முருகானந்தமின் ‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார், சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.