Home Cinema News ‘The GOAT’ டு ‘கல்கி 2898 AD’… கோலிவுட்டில் ரெடியாகி வரும் SCI-FI ஜானர் படங்கள்!

‘The GOAT’ டு ‘கல்கி 2898 AD’… கோலிவுட்டில் ரெடியாகி வரும் SCI-FI ஜானர் படங்கள்!

சயின்ஸ்-ஃபிக்ஷன் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்காக, இப்போது கோலிவுட்டில் இந்த ஜானரில் ரெடியாகி வரும் படங்களின் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது.

by Sivaanantham RB

‘த்ரில்லர், ஹாரர், காமெடி’ என ஒவ்வொரு ஜானர் படங்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுபோல் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களும் உண்டு. இப்போது கோலிவுட்டில் ரெடியாகி வரும் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானர் படங்களின் லிஸ்ட் இதோ..

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

Untitled design 112

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்கும் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஆக்ஷன் ஜானர் படம் தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT). இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் விஜய் இரண்டு வித்தியாசமான ரோல்களில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, அஜ்மல் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இந்த ஆண்டு (2024) செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

வெப்பன்

maxresdefault 8 edited

நடிகர்கள் சத்யராஜ் – வசந்த் ரவி இணைந்து நடிக்கும் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஆக்ஷன் ஜானர் படம் தான் ‘வெப்பன்’. இந்த படத்தை இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா, கஜராஜ், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனை ‘மில்லியன் ஸ்டுடியோ’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நேற்று நாளை 2

1615317 untitled 8

2015-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வேற லெவல் ஹிட்டான சயின்ஸ்-ஃபிக்ஷன் காமெடி ஜானர் படம் தான் ‘இன்று நேற்று நாளை’. இந்த படத்தை ரவிக்குமார் இயக்க, ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். தற்போது, பார்ட் 2-வுக்கும் முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தான் கதை-திரைக்கதை எழுதியிருக்கிறார். இப்படத்தை ‘இஃக்லூ’ புகழ் இயக்குநர் பரத் மோகன் இயக்கப்போகிறாராம். சி.வி.குமாரின் ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ – எஸ்.தங்கராஜின் ‘தங்கம் சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மாயவன் 2

tamil samayam

2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியான சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் ஜானர் படம் தான் ‘மாயவன்’. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்க, ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார். இப்போது மீண்டும் இதன் பார்ட் 2-வுக்காக (MAAYAONE) சந்தீப்பும், சி.வி.குமாரும் கைகோர்த்துள்ளனர். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஹீரோயினாக அகன்ஷா ரஞ்சன் கபூரும், வில்லன் ரோலில் நீல் நிதின் முகேஷும் நடிக்கிறார்கள். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார், கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.

கல்கி 2898 AD

images 4

டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான பிரபாஸ் நடிக்கும் சயின்ஸ்-ஃபிக்ஷன் ஆக்ஷன் ஜானர் படம் தான் ‘கல்கி 2898 AD’. மெகா பட்ஜெட் படமான இதை இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் வில்லனாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படத்தை இந்த ஆண்டு (2024) ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.