மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து வெற்றி படங்களை தந்துவரும் லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக இருந்து வருகிறார்.
தான் எடுக்கும் படங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி ஹாலிவுட் படங்களில் வரும் யூனிவெர்ஸ் போல தனக்கென்று ஒரு யூனிவெர்ஸை (LCU ) உருவாக்கினார். இது தமிழ் சினிமாவிற்கு முழுக்க முழுக்க புதிதான ஒன்றே.
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸின் முதல் படமான கைதி (அக்டோபர் 25, 2019) வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கைதி படத்தின் 2 -வது பாகம் எடுக்கவுள்ளதை சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தினார்.
A teaching exercise that led to a ‘10 minute Prelude to the Origins of LCU’. #ChapterZeroFL unlock 💥@GSquadOffl X @cinemapayyan X @LevelUp_edu @anirudhofficial @anbariv @selvakumarskdop @philoedit @ArtSathees @PraveenRaja_Off @proyuvraaj pic.twitter.com/IXhVJB3bGn
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 25, 2024
கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் படம் பின்னர் விக்ரம் படம், அதை தொடர்ந்து லியோ என ஒவ்வொரு படத்திலும் இடம் பெரும் ஒரு கேரக்டர் பற்றி அடுத்த படத்தில் ஹிண்ட் தந்து வருகிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸ் இடம்பெற்றிருப்பதும், கார்த்தி இடம் பெற்றிருக்கும் காட்சியும் அதில் காட்டப்பட்டது.
லியோ படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கமல் ஹாசன் குரல் மூலம் விஜய்க்கு தகவல் வரும் காட்சியும் இடம்பெற்றது. மேலும் கைதி 2, லியோ 2, ரோலெக்ஸ் என அடுத்து அடுத்து எடுக்க கதையை தயார் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Good Bad Ugly படத்தில் இணைந்ததை எண்ணி நெகிழ்ச்சி பதிவிட்ட அர்ஜுன் தாஸ்
LCU என்ற தொகுப்பு எங்கிருந்து உருவானது, அதில் யார் எல்லாம் இடம்பெற்றிருப்பார்கள், இதன் கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பது பற்றிய 10 நிமிட குறும்படம் ஒன்றை லோகேஷ் தயார் செய்துள்ளார். அது பற்றிய First Look ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்க்கு “Chapter Zero” என பெயரிட்டு முழுக்க முழுக்க துப்பாக்கியை கொண்டு 1 Shot, 2 Stories, 24 Hours என போஸ்டர் வெளியிட்டுள்ளார். இது 10 நிமிடம் கொண்ட குறும்படமாக அமையும் என்றும், LCU பற்றிய சந்தேகத்திற்கு பதில் இதில் இருக்கலாம் என தெரிகிறது.
தற்போது லோகேஷ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடித்த பிறகு LCU -ல் இடம்பெறப்போகும் படங்கள் எடுக்க அதிகம் வாய்ப்புள்ளது.