Home Cinema News பல சீரியல் நடிகர்களுடன் சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ ஷூட்டிங் இன்று தொடங்கியது!

பல சீரியல் நடிகர்களுடன் சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ ஷூட்டிங் இன்று தொடங்கியது!

‘கூலி' படத்தில் ஏராளமான சீரியல் நடிகர்களை நடிக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

by Sruthi Balasubramanian

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியிருக்கிறது.

கூலி/coolie shoot

படத்தில் ஏராளமான சீரியல்களை நடிகர்களை நடிக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவரது எல்லா படங்களிலுமே சீரியல், யு-ட்யூப் பிரபலங்கள் நடிப்பார்கள். அதன்படி பவி டீச்சர் என யூ-ட்யூபில் புகழ்பெற்ற பிரிகிடியா, விஜய் டிவியின் பூவையார், தொகுப்பாளினி ரம்யா ஆகியோரை விஜய்யின் மாஸ்டர் படத்தி நடிக்கவைத்திருந்தார் லோகேஷ். கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் சீரியல் நடிகையும், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவருமான ஷிவானி நடித்தார். அதனைத்தொடர்ந்து ரஜினியின் Coolie படத்தில் நடிக்கவும் ஏராளமான சீரியல் நடிகைகளை தேர்ந்தெடுத்திருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இதில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘இந்திரா’ சீரியலின் ஹீரோயின் ஃபவுசியையும் Coolie படத்தில் நடிக்கவைத்திருக்கிறார் லோகேஷ். நடிகர், நடிகைகளைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கிறது. 

கூலி படத்தின் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும், கதை, திரைக்கதை, வசனத்தில் லோகேஷுக்கு உதவ அறிவழகனும் பணியாற்றுகிறார்கள். அறிவழகன் லோகேஷின் முதல் படமான மாநகரம் மற்றும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படங்களுக்கு துணை எழுத்தாளராகப் பணியாற்றியவர். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.