Home Cinema News Vikram படம் வெளியாகி இன்றுடன் 2‌ ஆண்டுகள்! 

Vikram படம் வெளியாகி இன்றுடன் 2‌ ஆண்டுகள்! 

தமிழ் சினிமாவில் யுனிவர்ஸ் படங்களில் அதிரடியான ஆக்ஷன் படம் Vikram இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகியது. 

by Vinodhini Kumar

தமிழ் சினிமாவில் யுனிவர்ஸ் படங்களில் அதிரடியான ஆக்ஷன் படம் Vikram இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகியது. 

Vikram படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில் அதிரடி வசூல் செய்த படம். அதுவரை இளம் நடிகர்களுடன் இணைந்து ஆக்ஷன் படங்களை படைத்து வந்த லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து அவரின் முந்தைய ஸ்பை படத்தின் பெயரில் பிரம்மாண்டமாக இயக்கிய படம் Vikram. 

இந்த படத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி  நடித்திருந்தனர். 1986ல் வெளியான விக்ரம் படத்தின் அடிப்படையில் நடிகர் கமல்ஹாசனின் கதாப்பாத்திரத்தை ஏஜன்ட் அருண் குமார் விக்ரம் என எழுதி, திரைக்கதையில் அசத்தியிருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தனது வளர்ப்பு மகனை கொலை செய்தவர்களை பழிவாங்கும் ஸ்பெஷல் ஏஜன்ட் விக்ரம், இதில் கடைசியில் பெரிய போதைப்பொருள் கும்பலை கண்டுபிடிக்கும் வகையில் கதை அமைந்திருக்கும். 

Snapinsta.app 285316180 2225516407625553 2201038681773802614 n 1080 edited 1

Vikram என்ற‌ கதாப்பாத்திரத்தின் பின்னணி, அவரின் நோக்கம் என்பதில் முதல் பாதி அமைய, இரண்டாம் பாதியில் அதிரடி திருப்பங்களுடன் ‘ரோலெக்ஸ்’ யார்? ஃபகத் ஃபாசிலின் கதாப்பாத்திரம் என்னவாக மாறும்? விஜய் சேதுபதி சந்தானமாக மிரட்டியதும் இரண்டு பாதியின் கதை‌. 

படத்திற்குள் பல கதாப்பாத்திரங்கள் இருந்தும், ஒவ்வொருவரின் நோக்கமும் தெளிவாக அமைந்து, கடைசியில் எப்படி ஒன்றுபட்ட இலக்காக மாறுகிறது என்பது லோகேஷ் கனகராஜின் திரைக்கதையின் தெளிவின் அடையாளம். Vikram படத்தில் வரும் சிறிய பாத்திரங்கள் கூட பெரிய பங்காக அமைந்து, ரசிகர்களை திரையரங்குகளில் ஆரவாரமாக கொண்டாட‌ வைத்தது. ஏஜன்ட் டீனா, ஏஜன்ட் உப்பிளி, ஏஜன்ட் லாரன்ஸ் என முந்தைய விக்ரம் படத்தின் பாத்திரங்களையும் தழுவி ரசிகர்களுக்கு கதையின் அடிப்படையை விளக்கியது. 

Vikram Audio Poster

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் எல்லா பாடல்களும் மாஸ் ஹிட்டானது. பாடல்கள் கதையின் அங்கமாக மட்டுமே இருந்ததும் கதையின் பலமாக பார்க்கப்பட்டது. பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் பலரின் ரிங் டோன் ஆக ஒலித்தது. ராக்ஸ்டார் அனிருத்தின் பின்னணி இசையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை அதிரடியாக கொண்டாட வைத்தது. 

Snapinsta.app 286053730 386500250203339 1102331334238687586 n 1080

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் முடிந்தும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு போகாமல் கூடுதல் காட்சிக்காக காத்திருந்து‌ ‘ரோலெக்ஸ்’ யார் என தெரிந்து தியேட்டரில் கூச்சலிட்டு கொண்டாடினர். சூரியாவின் புதிய பரிமாணத்தை மக்கள் எதிர்பார்க்காத வகையில் கதையில் எழுதி பெரிய விருந்தளித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய மற்ற படங்களையும் Vikram படத்தில் இணைத்து, அர்ஜுன் தாஸ், கார்த்திக் என ‘கைதி’ படத்தின் பாத்திரங்களை கூடுதல் காட்சிகளாக கதையில் சேர்த்து தமிழில் முதல் முறையாக தனக்கென தனியான ‘லோகேஷ் யுனிவர்ஸ்’ ஒன்றை அமைத்து வெற்றியை குவித்தார். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.