சிறிய கூட்டத்தில் கலந்துரையாடல் என்பது என்னக்கு பிடித்த ஒன்று எனவும், நீண்ட நாட்களாக இதில் கலந்துகொள்ள நினைத்து தற்போது தான் வாய்ப்பு கிடைத்ததாக கூகை கலந்துரையாடல் நிகழ்வில் லோகேஷ் கூறினார்.
பா.ரஞ்சித் உடைய கூகை நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பங்குகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துவந்தார். அதில் ஒருசில விஷயங்கள் கவனிக்கும் படியாக லோகேஷ் கூறியுள்ளார்.
இன்னும் 5 வருடத்திற்கு ஆக்சன் சார்ந்த படத்தை எடுக்க மட்டுமே நேரம் உள்ளது. வேறு மாதிரியான கதை, ரொமான்டிக் கதை எடுக்க 5 வருடத்திற்கு மேல் ஆகும் என கூறினார்.
கூலி படம் பற்றிய கூறியது:
ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் படத்தின் ஷூட்டிங், நடிகர்கள் அப்டேட் அடிக்கடி வெளியான நிலையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றது குறித்த தகவல் படக்குழுவினருக்கு தெரிந்த ஒன்றே.
பல வதந்திகள் வந்த நிலையில் ரஜினிகாந்த் உடைய சூட்டிங் பகுதிகள் முடிந்த பிறகுதான் சிகிச்சை பெற சென்றதாகவும் கூறினார். இன்னும் சில நாட்களில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கயுள்ளதையும் கூறினார்.
கைதி, லியோ படம் குறித்து பேசியது:
கைதி படத்தின் ஷூட்டிங் போதே மாஸ்டர் படத்தை எடுக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் கைதி படம் சென்சார் போர்டுக்கு சென்ற போது ஏற்பட்ட பிரச்சனைகள், பின்னர் எந்தெந்த இடத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என ஒரு தெளிவு ஏற்பட்டது.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த வதந்தி ஏற்ப்புடையது இல்லை – லோகேஷ் கனகராஜ்
LCU குறித்து பேசுகையில் கூலி படம் இந்த யூனிவர்சில் வராது. ஆனால் பின்னர் எடுக்கும் கைதி 2 படம் LCU பகுதியின் உச்சகட்ட படமாக இருக்கும்.அனைத்து கேரக்டர்களும் இந்த படத்தில் இடம்பெறும்படி கதை அமையும் எனவும் கூறினார்.
விஜய் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அதேபோல அவரின் தனிப்பட்ட முடிவிலும் நாம் தலையிட முடியாது. விஜய்யின் லியோ படம் குறித்து பேசும்போது ஆரம்பத்தில் படத்தின் பெயரை பார்த்திபன் என முடிவு செய்து வைத்ததாகவும், அது ஒரு விதமாக ஈர்க்கும் பெயராக இல்லை. எனவே லியோ என வைத்ததாக கூறினார். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து லியோ 2 படத்தை பார்த்திபன் என வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
சண்டை காட்சிகள் குறித்து பேசும்போதும் எதார்தமாகவும், இயற்பியலுக்கு மாறாகவும் எப்போதும் எடுக்க மாட்டேன் எனவும், சண்டை என்பதும் ஒரு விதமான படத்தின் பகுதி. அதையும் சிறப்பாக எடுக்க நினைப்பேன்.
லோகேஷ் கனகராஜ் படத்தில் பெருமளவு வன்முறை நிறைந்ததாகவே இருப்பது குறித்து கேட்கும்போது நான் நினைக்கும் ஆக்சன் படத்தை இன்னும் எடுக்கவில்லை எனவும், நான் நினைத்த படம் இதுவரை எடுத்த படங்களில் ஓரளவு மட்டுமே ஆக்சன் இருந்ததாக கூறினார்.
லியோ படத்தில் செய்த தவறையும், 3D சினிமா தனக்கு பிடிக்காது எனவும் கூறினார். கூகை நிகழ்வில் கலந்துகொண்ட பலரது கேள்விக்கும் தான் சந்தித்த அனுபவம் பற்றி பதில் கூறி வந்தார் லோகேஷ்.