நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஒரு கிரிக்கெட் பற்றிய படமாக உருவாகி வருகிற படம் ‘லப்பர் பந்து‘. இந்த படத்தை இளம் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். உடன் அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, ‘வதந்தி’ சீரிஸ் மூலம் பிரபலமான நடிகை சஞ்சனா நடிக்கிறார்.

‘லப்பர் பந்து’ படத்தை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ஷான் ரோல்டன் இசையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
#LubberPandhu in theatres this SEPTEMBER 🔥
— Prince Pictures (@Prince_Pictures) August 26, 2024
Get ready for the Trailer – from August 28th.
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia. @Prince_Pictures @iamharishkalyan #AttakathiDinesh @tamizh018 @isanjkayy #Swasika @kaaliactor @bala_actor @RSeanRoldan @DKP_DOP… pic.twitter.com/CH6hw448nS
கிரிக்கெட் பற்றி இந்த ஆண்டு ஏற்கனவே ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய தத்ரூபமாக நடித்து பல பாராட்டுக்கள் பெற்று அவரின் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹரீஷ் கல்யாண் பிறந்தநாளுக்கு இரண்டு படங்களின் அப்டேட் – லப்பர் பந்து & டீசல்!
அவ்வப்போது ஒரு ஸ்டைலான நகரத்து இளைஞனாகவும் பின்னர் வேறுபாடு காட்ட இப்படியான படங்களை தேர்ந்து தெளிவாக நடித்துவரும் ஹரிஷ் கல்யாண், எப்போதுமே நேர்த்தியான தனித்துவமான பாத்திரங்களை நடித்து வரும் அட்டகத்தி தினேஷ் உடன் இணைவதும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக வளர்ந்து வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]