Home Cinema News ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ ட்ரைலர் வெளியானது!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ ட்ரைலர் வெளியானது!

கிரிக்கெட் சார்ந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள 'லப்பர் பந்து' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பாலமுருகன் ஆகியோர் நடிப்பில் ‘லப்பர் பந்து‘ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். 

Gully கிரிக்கெட் போட்டிகளில் அசைக்க முடியாத திறமையான batsman ‘கெத்து’ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். அதேபோல் பக்கத்துக்கு ஊரின் திறமையான பௌலர் ‘அன்பு’ என்ற பாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். 

லப்பர் பந்து poster

கிரிக்கெட் மைதானத்தில் இருவருக்கும் இடையில் தொடங்கும் போட்டியும் மோதலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொடர, இருவருக்கும் இடையே உள்ள பிரிவினை ஹரிஷ் கல்யாணின் காதலை பாதிக்குமா  என்றெல்லாம் பற்றி பேசும் படமாக தெரிகிறது ‘லப்பர் பந்து’. 

Lubber Pandhu cast

வயதான கதாபாத்திரத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஸ்வாசிகா நடித்துள்ளனர், அவர்களின் மகளாக நடிகை சஞ்சனா நடித்துள்ளார். சஞ்சனா மற்றும் ஹரிஷ் கல்யாணின் காதலுக்கு கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் மோதல் இடையூறாக நிற்பதை பற்றியும் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. 

இந்த ‘லப்பர் பந்து‘ படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. திரையரங்குகளில் செப்டம்பர் 20ம் தேதி இந்த படம் வெளியாகும் என்றும் ட்ரைலரில் தெரிவித்துள்ளனர். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.