தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் “Hero with zero haters” என்று அழைக்கப்படுவது நடிகர் துல்கர் சல்மான் ஆகும். மலையாளத்தையும் தாண்டி பிற மொழி ரசிகர்களிடம் தனது யதார்த்தமான நடிப்பாற்றலால் செல்வாக்கை பெற்றுள்ளார்.
தெலுங்கில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த “மஹாநடி” (தமிழில் – நடிகையர் திலகம்) மற்றும் “சீதா ராமம்” இரண்டு திரைப்படங்களும் இந்திய அளவில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தாக அமைந்தது என்றே கூறலாம். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான “Lucky Baskhar” period க்ரைம் டிராமா பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தின் திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல், மக்களை வசீகரிக்கும் வகையில் இருந்த காரணத்தால் இந்த படம் வெள்ளித்திரையில் வெற்றிப் படமாக மாறியது.
Netflix-ல் முதல் இடம்
நவம்பர் 28 ஆம் தேதி Netflix-ல் வெளியானது “Lucky Baskhar”. வெளியான ஒரு வாரத்தில் 5.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதால் Netflix தளத்தின் ட்ரெண்டிங்கில் No.1 இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அதிகம் பார்க்கப்பட்ட “தென்னிந்திய திரைப்படம்” என்ற சாதனையையும் படைத்துள்ளது. ஏற்கனவே, திரையரங்கில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகில் நடிகர் துல்கர் “ஆகாசம் லோ ஒக்க தாரா, காந்தா” என மேலும் இரண்டு திரைப்படங்களை நடித்து வரும் நிலையில், அந்த திரைப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
படம் | ஆகாசம் லோ ஒக்க தாரா | காந்தா |
இயக்குனர் | பவன் சதினெனி | செல்வமணி செல்வராஜ் |
நடிகர்கள் பெயர் | துல்கர் சல்மான், சாய் பல்லவி | துல்கர் சல்மான், ராணா, பாக்யஸ்ரீ போர்ஷே |
மொழி | தெலுங்கு | தெலுங்கு |