இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், நடிகர் ரவி மோகன், அசின், நதியா மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ம் ஆண்டு வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (M. Kumaran Son Of Mahalakshmi) திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் காட்சியளிக்க வருகிறது. இந்த அறிவிப்பினை இப்படத்தின் இயக்குனரான மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் வெளியாகி, மக்களிடையில் நல்ல வரவேற்பு பெற்று வந்த திரைப்படங்களை மீண்டும் திரையில் காட்சியளிப்பதற்காக ரீ ரிலீஸ் செய்வது சமீபத்தில் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இப்படி இதுவரை பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, மக்களிடையில் பெரும் வரவேற்பு பெற்று திரையரங்குகளில் கொண்டாடும் அளவிற்கு வெளியாகியிருந்தது.
Read More: பிரமாண்டமாகத் துவங்கியுள்ள நடிகை நயன்தாரா – வின் ‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு!
அந்த வரிசையில், தற்போது 2004 ம் ஆண்டு வெளியாகி, இன்றளவும் மக்கள் எந்த வித சலிப்பும் இல்லாமல் மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவிற்கு ஒரு எண்டெர்டைன்மென்ட் படமாக இருக்கும் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (M. Kumaran Son Of Mahalakshmi) திரைப்படம் மார்ச் 14 ம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இப்படத்தில் நடிகர் விவேக்கின் காமெடி பேச்சுக்கள் அனைத்தும் ரசித்து சிரிக்கும் அளவிற்கு அற்புதமாக அமைந்திருக்கும்.
Some stories never fade, some emotions never age.. M Kumaran S/O Mahalakshmi is getting re released in theaters after 2 decades on March 14.
— Ravi Mohan (@iam_RaviMohan) March 8, 2025
Enjoy the motherhood experience in theaters 👌🏼#HappyWomensDay pic.twitter.com/mau0kesvzo
நடிகர் ரவி மோகன் இதுவரை எத்தனை வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், அவரின் ஆரம்ப கால கட்ட படங்களான ‘ஜெயம்’, ‘உனக்கும் எனக்கும்’, ‘மழை’ மற்றும் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ போன்ற படங்களுக்கு இன்றும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
மேலும் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில், செண்டிமெண்ட், காதல், கலாட்டா, ஆக்ஷன் மற்றும் இன்னிசை கொண்ட பாடல் என அனைத்தும் சம அளவில் நிறைந்து, குடும்பத்துடன் திரையரங்க அனுபவத்தில் பார்ப்பதற்கு ஒரு நல்ல ஃபேமிலி எண்டெர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]