Home Cinema News தமிழ் சினிமாவில் “சாக்லேட் பாய்” என்று கொண்டாடப்பட்ட “Madhavan”…

தமிழ் சினிமாவில் “சாக்லேட் பாய்” என்று கொண்டாடப்பட்ட “Madhavan”…

முதல் படத்திலேயே மணிரத்தினம் இயக்கத்தில் வித்தியாசமான கதையை கொண்டு தமிழ் சினிமாவின் "சாக்லேட் பாய்" ஆக மாறினார் MADHAVAN.

by Sudhakaran Eswaran

முதல் படத்திலேயே மணிரத்தினம் இயக்கத்தில்  வித்தியாசமான கதையை கொண்டு தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” ஆக மாறினார் Madhavan. 

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காதல் நாயகனாகவும், பெண்கள் கொண்டாடும் கனவு நாயகனாகவும் இந்திய சினிமாவில் ரசித்து கொண்டாடியவர் “MADDY” என்று செல்லமாக கூறப்படும் Madhavan. தனது முதல் படத்திலேயே மணிரத்தினம் இயக்கத்தில்  வித்தியாசமான கதையை கொண்டு தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” ஆக மாறினார். 

Untitled design 4

1970-ல் ஜாம்ஷெட்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்த மாதவன் பள்ளிப்படிப்பை டி.பி.எம்.எஸ். ஆங்கிலப் பள்ளியில் முடித்தார். கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் இருந்து கலாச்சாரத் தூதராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக ஸ்காலர்ஷிப் பெற்றார். இந்த ஸ்காலர்ஷிப் மூலம் கனடா சென்று இருந்தார். பின்னர் கோலாப்பூர் திரும்பி எலக்ட்ரானிக்ஸில் BSC  பட்டம் பெற்றார்.

22  வயதில் மஹாராஷ்டிராவில் NCC பயிற்சி முடித்து இங்கிலாந்து சென்று பிரிட்டிஷ் ராணுவம், ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகியவற்றில் பயிற்சி பெற்றிருந்தார். 6 மாதம் வயது குறைவு  காரணமாக அவரால் அங்கு பணியாற்ற முடியவில்லை.  

ஆரம்ப காலத்தில் ஹிந்தி டிவி  நிகழ்ச்சிகள், சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் மணிரத்தினம் அவர்களின் அறிமுகம் கிடைக்க இருவரின் கூட்டணியில் உருவான காதல் காவியம் தான் “அலை பாயுதே”. முதல் படமே ஹிட் ஆக  என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், நளதமயந்தி என தமிழ் சினிமாவில் வரிசை கட்டி படங்கள் வந்தன.  

மின்னலே படத்தில் ரியல் மேடி ஆக படம் முழுவதும் ரசிக்க வைத்திருப்பார். அன்பே சிவம் படத்தில் கமல் ஹாசனுடன் படம் முழுவதும் பயணம் செய்து கமலுக்கு இணையான நடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

Untitled design 5

பெரும்பாலும் காதல் கதைகளில் நடித்து வந்த மாதவன் 2004-ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “ஆயுத எழுத்து” படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கியிருந்தார். இன்பசேகர் ஆக முரட்டு தனமாகவும், அக்கோஷமாகவும் நடித்து சாக்லேட் பாய் ஆக இருந்த மாதவன் மாஸ் ஹீரோவாக மாறியிருப்பார்.  

ஜே ஜே படத்தில் காதல் நாயகனாக தன்னை மீண்டும் நிரூபித்திருப்பார். படத்தில் ஹீரோ ஹீரோயின் குறைந்த நேரம் மட்டுமே சந்தித்து பேசியிருந்தாலும் காதலின் வலியை அழகாக காட்டியிருப்பார்.  தம்பி படத்தில் சமூகத்தில் ஏற்படும் அநியாயத்தை தட்டி கேட்கும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியிருப்பார். தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் முக்கிய நடிகராக வளம் வந்தார். 2009-ல் வெளியான யாவரும் நலம் படத்தில் வித்தியாசமான கதை கொண்டு படம் முழுவதும் பரபரப்பாக வைத்திருந்தார். 

பின்னர் வந்த படங்கள் ஓரளவு மட்டுமே வரவேற்பு பெற்ற நிலையில் 2016-ல் வெளிவந்த “இறுதிச்சுற்று” படம் MADHAVAN சினிமா வாழ்வில் பெரிதும் கொண்டாடப்பட்டது. பாக்ஸிங் கோச் ஆக மிரட்டியிருப்பார். அதன் பின்னர் அடுத்த ஆண்டே விஜய் சேதுபதியுடன் “விக்ரம் வேதா” படத்தில் போலீஸ் ஆஃபீஸ்ராக கலக்கியிருப்பார். இந்த இரண்டு படங்களும் மாதவன் சினிமா வாழ்வில் காம்பேக் படமாக அமைந்தது. 

2022-ல் வெளியான “ராக்கெட்ரி” படத்தில் நம்பி நாராயணன் அவர்களின் உண்மை கதையை மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இந்த படம் தேசிய திடைப்பட விழாவில் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது.   

நடிகர் என்பதை தாண்டி சிறந்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக உயர்கல்வியையும் முடித்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலாய், மலையாளம் என கிட்டத்தட்ட 7 மொழிகளில் நடித்துள்ளார். மேலும் சிறந்த கோல்ப் விளையாட்டு வீரரும் கூட.  

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தனக்கென்று இடத்தை பிடித்து வந்துள்ளனர். அந்த வகையில் MADHAVAN  நடிப்பு, அழகான சிரிப்பு, இனிமையான பேச்சு என “சாக்லேட் பாய்” ஆக தன்னை நிரூபித்திருந்தார்.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.