சென்ற மாதம் 14 ஆம் தேதி வெளியான நடிகர் சூர்யாவின் “Kanguva” திரைப்படம் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய எதிர்மறை கருத்துக்களையும், வெறுப்புணர்வையும் எதிர்கொண்டது. இதன் காரணமாக Kanguva படத்தையும், படக்குழுவினரையும் ஆதரித்து சினிமாவில் உள்ள பல முன்னணி கலைஞர்கள் ஆதரித்தனர். இது போன்ற எதிர்மறை கருத்துக்களை பதிவிடும் YouTube-களை எதிர்த்து நான்கு பக்க கண்டன அறிக்கையை வெளியிட்டது (TFAPA) தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். மேலும், Madras High Court-ல் பொதுச் செயலாளர் T.சிவலிங்கம் மூலம் வழக்கு தொடரப்பட்டது.
December 2024 Releases: தமிழில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!!
வழக்கில் குறிப்பிட்டவை
- சமீப காலத்தில் திரைப்படம் மற்றும் சமூக ஊடகம் மற்றும் திரைப்பட விமர்சனம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது.
- ஆனால் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு சமூக ஊடகம் பாலமாக செயலாற்றி வருகிறது.
- சில YouTube விமர்சகர்கள் வேண்டும் என்றே எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- அதற்கு காரணம் சொந்த விருப்பு வெறுப்பு மற்றும் வணிக பகை.
- இது ஒரு படத்தின் box office collection-ஐ பெரிதும் பாதிக்கிறது என்று கூறியிருந்தது TFAPA.
- இதை தவிர்க்கும் விதமாக, படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு YouTube விமர்சகர்களை சினிமா theatre வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும்,
- அவர்களின் YouTube, இன்ஸ்டாகிராம், X, Facebook போன்ற தளங்களில் (Public Review) இதுகுறித்த பதிவை முதல் மூன்று நாட்களுக்கு வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.
Madras High Court
Justice S.சௌந்தர் இன்று, டிசம்பர் 3, 2024 இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது,
“படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனத்தை தடை செய்ய முடியாது. விமர்சனம் செய்வது கருத்து சுதந்திரம் என்பதால் அதை தடை செய்ய முடியாது. அவதூறு பரப்பினால் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்.”
மேலும், தமிழ்நாடு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், காவல்துறை ஆணையர் மாற்று YouTube-க்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக Madras High Court நீதிபதி உத்தரவிட்டார்.