64 வருடங்கள் திரைத்துறையில் அனுபவத்தை கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் அவரது படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். அவரின் Magnetic voice-க்கு ரசிகன் ஆகாத ஆளே இல்லை என்று கூறலாம். 1975 ஆம் ஆண்டு வெளியான “அந்தரங்கம்” திரைப்படத்தில் ‘ஞாயிறு ஒளி மழையில்’ என்ற பாடல் தான் அவர் பாடிய முதல் பாடல். அவர் படங்கள் மட்டும் அல்ல மற்ற நடிகர்களின் திரைப்படங்களிலும் அவர் பாடியுள்ளார்.
உல்லாசம் – 1997
நடிகர் அஜித் குமார், விக்ரம், மற்றும் நடிகை மகேஸ்வரி ஆகியோர் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியானது “உல்லாசம்”. ஆக்ஷன் மற்றும் காதலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியவர்கள் ஜோசப் D.சாமி & ஜெரால்டு ஆரோக்கியம் சுருக்கமாக “J.D.-Jerry” என்று அழைக்கப்படுவர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். இதில் இடம் பெற்ற “முத்தே முத்தம்மா” பாடலை நடிகர் கமல்ஹாசன் தனது magnetic voice-ல், பாடகிகள் ஸ்வர்ணலதா மற்றும் பாவதாரிணியுடன் இணைந்து பாடியுள்ளார்.
Indian Cinema-விற்கு உலகநாயகன் அறிமுகப்படுத்திய “Technologies”
புதுப்பேட்டை – 2006
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக “புதுப்பேட்டை” படத்தை கூறுவர். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான “புதுப்பேட்டை” ஆல்பம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதில் “நெருப்பு வாயினில்” என்ற பாடலில் உலகநாயகனின் magnetic voice-ஐ கேட்கலாம்.
முத்துராமலிங்கம் – 2017
பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு கவுதம் கார்த்திக், நெப்போலியன், பிரியா ஆனந்த், சுமன் ஆகியோர் நடிப்பில் “முத்துராமலிங்கம்” வெளியானது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்தார். அதில் இடம் பெற்ற “தெக்கத்தி சிங்கம்மடா” பாடலை உலகநாயகன் பாடினார்.
மெய்யழகன் – 2024
‘96’ என்ற காதல் காவியத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் தற்போது நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியை வைத்து இயக்கி வெளியிட்டுள்ள “மெய்யழகன்” திரைப்படம் மக்களிடையே நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. இதில் magnetic voice-க்கு சொந்தக்காரரான நடிகர் கமல் அவர்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் “யாரோ இவன் யாரோ, போறேன் நான் போறேன்” ஆகிய இரண்டு பாடல்களை பாடியுள்ளார்.
படம் | வெளியான வருடம் | பாடல் | பாடலாசிரியர் | இசையமைப்பாளர் |
உல்லாசம் | 1997 | முத்தே முத்தம்மா | பார்த்தி பாஸ்கர் | கார்த்திக் ராஜா |
புதுப்பேட்டை | 2006 | நெருப்பு வாயினில் | நா.முத்துக்குமார் | யுவன் சங்கர் ராஜா |
முத்துராமலிங்கம் | 2017 | தெக்கத்தி சிங்கம்மடா | பஞ்சு அருணாச்சலம் | இளையராஜா |
மெய்யழகன் | 2024 | யாரோ இவன் யாரோ, போறேன் நான் போறேன் | உமாதேவி | கோவிந்த் வசந்தா |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]