2024 ஜூன் மாதம் வெளியாகி இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த படம் ‘மகாராஜா’, சீனாவில் வெளியாகி அங்குள்ள திரையரங்குகளை நிரப்பி வருகிறது. வெளியாகிய சில நாட்களிலேயே வசூல் சாதனை மட்டுமில்லாமல் படத்தின் கதையோட்டத்திற்கும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இன்றுவரை (டிசம்பர் 20, 2024) சீனாவில் 85.87 கோடி வசூலை சீனாவில் ஈட்டியுள்ளது. (Source: Sacnilk )
Box Office: #Maharaja Beats #Baahubali2 To Become Highest-Grossing South Indian Movie In Chinahttps://t.co/Row33OtISH
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) December 20, 2024
இந்த வசூலை கடந்ததால் ஏற்கனவே இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடித்து சீனாவில் அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படமாக உருவெடுத்துள்ளது நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கிய மகாராஜா படம். தற்போது 100 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் வசூலிக்கும் நோக்கில் நகர்ந்து வருகிறது.
#Maharaja #VJS50#netflix @VijaySethuOffl @NetflixIndia @Netflix_INSouth pic.twitter.com/dF5nhmoZMV
— Nithilan Saminathan (@Dir_Nithilan) July 14, 2024
இந்தியாவிலிருந்தது பல படங்கள் வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு வருவது வழக்கமாகவுள்ள நிலையில், தமிழ் மொழி படங்கள் வரிசையில் சீனாவில் மட்டுமல்ல, வெளியான ஒரே பிற நாட்டில் 10 மில்லியன் டாலர்கள் வசூலித்த முதல் படம் என்ற சாதனையும் செய்துள்ளது. சீனாவில் வெளியாகிய 20 நாட்களில் 85 கோடி வசூலித்தால் வெளியாகிய நாள் முதல் இதுவரை உலகளவில் 193 கோடி ரூபாய் வசூலித்துள்ளது மஹாராஜா திரைப்படம். தற்போது உலகளவில் மகாராஜா படம் 200 கோடி ரூபாய் வசூலிக்கும் பாதையில் இருப்பதும், அப்படி வசூல் செய்தால் 2024ம் ஆண்டு வெளியாகி 200 கோடி ருபாய் வசூல் சாதனை செய்த நான்காவது தமிழ் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு சேரும்.
இந்தியளவில் இதுவரை அமீர் கான் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ படம் சீனாவில் 1300 கோடி ரூபாய் வசூலித்து ஈடுசெய்யமுடியாத முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]