Home Cinema News வசூல் வேட்டை செய்து அரியாசனம் ஏறிய “Maharaja”…

வசூல் வேட்டை செய்து அரியாசனம் ஏறிய “Maharaja”…

Top ஹீரோ படங்களில் வில்லனாக கலக்கி வந்த விஜய் சேதுபதியின் 50-வது படமான Maharaja-வில் ஹீரோவாக காம்பேக் தந்து அசத்தியுள்ளார். 

by Sudhakaran Eswaran

Top ஹீரோ படங்களில் வில்லனாக கலக்கி வந்த விஜய் சேதுபதியின் 50-வது படமான Maharajaவில் ஹீரோவாக காம்பேக் தந்து அசத்தியுள்ளார். 

கோலிவுட், பாலிவுட் என அசத்திவரும் விஜய் சேதுபதியின் 50-வது படமான Maharaja ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. குரங்கு பொம்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியானது. 

அனுராக் காஷ்யப், சதுரங்க வேட்டை புகழ் நட்டி, மணிகண்டன், சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

Maharaja movie poster

ரிலீஸ் ஆனா முதல் நாளே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆனா நிலையில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீப காலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த  சில படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகாத நிலையில், தற்போது இந்தப் படம் அவரது கம்பேக் தந்துள்ளது என்றே கூறலாம். 

நடிகர்களுக்கு 50-வது , 100-வது படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு காத்துக்கொண்டிருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதியின் 50-வது படமான Maharaja-வும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. வித்தியாசமான first look போஸ்டர் ரிலீஸ் ஆகி ரசிகர்களை எந்த மாதிரியான கதை என்று யோசிக்க வைத்தனர் படக்குழு. 

பெரிய அளவில் ஆரவாரம் இல்லாமல் சலூன் கடை, போலீஸ் ஸ்டேஷன், குப்பை தொட்டி என கதையை ரசிக்கும் படி எடுத்திருந்தார் இயக்குனர். விஜய் சேதுபதியின் வழக்கமான உடல் மொழி, பேச்சு இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தியது.   

ரிலீஸ் ஆன 10 நாளில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு கேப்டன் மில்லர், அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 100 கோடி வரை வசூல் செய்தது.  

விஜய் சேதுபதி மகாராஜா, 
அனுராக் காசிப்செல்வம், 
மம்தா மோகன்தாஸ் ஆசிபா,
நடராஜன் வரதராஜன் (இன்ஸ்பெக்டர்), 
அபிராமி  கோகிலா,
சிங்கம் புலி  நல்லசிவம், 
மணிகண்டன் தனா,
முனீஷ்காந்த் குழந்தை வேலு,
பாரதி ராஜா கோபால் தாத்தா, 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.