நடிகர் Mohanlal தமிழில் நல்ல கதாப்பாத்திரங்களை தந்துள்ளார். அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
Mohanlal என்ற நடிகர் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களுள் மிக முக்கியமானவர். அவரின் நடிப்பால் இன்றளவும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வருபவர். இன்று நடிகர் Mohanlal தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் மலையாளம் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். தனது சிறு வயதிலிருந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய நடிகர் Mohanlal, 18 வயதில் முதல் படத்தில் நடித்தார். ஆனால் பல காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை.

தொடக்கத்தில் தனது உருவத்தால் வில்லன் பாத்திரங்களில் நடித்தவர், ‘இவிடே துடங்குன்னு’ படத்தில் இருந்து அக்மார்க் நல்ல உள்ளம் கொண்ட ஹீரோவாக, எதார்த்தமான கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 1984 லவ் காமெடி பாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர், இயக்குனர் பிரியதர்ஷன் உடன் 44 படங்களில் வெற்றி கூட்டணி அமைத்துள்ளார். நடிகர் Mohanlal நடித்த முதல் பிற மொழி படம், தமிழில் வெளியான ‘இருவர்’. இயக்குனர் மணிரத்னம் அரசியல் வாழ்வியல் படமான ‘இருவர்’ படத்தில் திராவிட அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களான புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் கருணாநிதி அவர்களின் வாழ்க்கையை படமாக்கினர். இதில் எம் ஜி ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடித்திருப்பார். நடிகர் மோகன்லால் கண்கள் வழியே கதையின் நுணுக்கங்களை எளிதாக பார்ப்பவன்களுக்கு கடத்தி விடும் வித்தகர். திரையில் அவரின் மௌனம் கூட கதையை தெளிவாக சொல்லிவிடுவார். ‘இருவர்’ படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது, டொராண்டோ திரைப்பட விழா மற்றும் பெல்கிரேட் சர்வதேச திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கு முன்னர் தமிழில் பிரியதர்ஷன் இயக்கிய ‘கோபுர வாசலிலே’ படத்தில் காமியோ வேடத்தில் நடித்திருப்பார் நடிகர் மோகன்லால். தமிழ் ரசிகர்களுக்கு நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பின்னர் தமிழில் டப் செய்யப்பட்ட ‘சிறைச்சாலை’ படத்தில் அவரின் நடிப்பால் இன்னும் பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்தது. இந்த படத்திலும் மொழிகள் கடந்து ரசிகர்களை சம்பாதித்தார் நடிகர் மோகன்லால்.

.
.தமிழில் துணை கதாப்பாத்திரங்களில் ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் கமல் ஹாசனுடன் நடித்திருப்பார். பின்னர் ‘ஜில்லா’ படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையாக நடித்திருப்பார் நடிகர் மோகன்லால். இந்த படங்களில் அவரின் பங்கு அதிகமாக பாராட்டப்பட்டது. சூரியா நடிப்பில் ‘காப்பான்’ படத்தில் முக்கியபாத்திரத்தில் நடித்திருப்பார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றியான ‘ஜெய்லர்’ படத்திலும் எதிர்ப்பார்க்காத கதாப்பாத்திரத்தில் அவரை ரசிகர்கள் கொண்டாடினர்.
நடிகர் மோகன்லால் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வருவதும், அந்த படங்களில் சில தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஹிட்டாகியும் உள்ளது. ‘புலி முருகன்’, ‘மரக்கர்’ படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சினிமாவில் எதார்த்த நாயகன் என்றும் இந்தியாவின் மார்லென் ப்ராண்டோ எனவும் பாராட்டப்படும் நடிகர் மோகன்லால் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடித்து ரசிகர்களை உண்மையான சினிமா கதைகள் பக்கம் ஈர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]