மலையாளம் சினிமா துறையில் புதுமுக நடிகைகள் பலரும் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலகள் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சினிமா வாய்ப்பு வாங்கி தருவதற்காக தப்பாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து Association of Malayalam Movie Artists (AMMA), மலையாள நடிகர்கள் சங்கம் இதற்கு தகுந்த பதிலளிக்காமல் இருந்தது பெரும் பேசுபொருளாக கடந்த நாட்களில் அமைந்தது.
Hema Committee Report சமீபத்திய தகவல்
27/8/2024
AMMA நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால், நேற்று தலைவர் பதவியிலிருந்து விளக்கினார். அவருடன் 16 பேர் பதவி விளக்கினார்கள்.
28/8/2024
Justice Hema Committee Report ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று திரையுலகில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களின் தொழிற்சங்கமான கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFKA) வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட மற்றும் உளவியல் ஆதரவை வழங்குவதாகவும் கூட்டமைப்பு உறுதியளித்தது.
Hema Committee Report தொடர்பாக கேரளா அரசு தற்காப்பு நிலையில் இருப்பதாகவும், “அரசாங்கம் கண்ணாமூச்சி விளையாடி சில பிரபலங்களை காப்பாற்ற முயல்கிறது” மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் குற்றம்சாட்டினார்.
29/8/2024
மலையாள நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீது புகார் கொடுத்ததை அடுத்து, திருசூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளதாக தகவல். Hema Committee Report பற்றி கேள்வி கேட்டபோது கோபமாக பதிலளித்த சுரேஷ் கோபி, இன்று தன்னை பத்திரிக்கையாளர்கள் காரில் ஏறவிடாமல் தடுத்ததாக புகார்.
நடிகர் விஷாலிடம் மலையாள திரைத்துறையில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளை பற்றி கேட்டபோது “எவனாவது தவறாக நடந்துகொள்ள முயற்சி பண்ணால், முதலில் அந்தப் பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அந்தப் பெண் அவனை செருப்பால அடிக்கணும்” என கூறியுள்ளார்.
30/08/2024
மகிலா காங்கிரஸ் ஆர்வலர்கள் பலர் கொல்லம் மற்றும் கொச்சி பகுதியில் திரண்டு, அமைச்சர் முகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கும் வரை அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி போராட்டம் நடத்திவருகிறார்கள்.
31/08/2024
நடிகரும் முன்னாள் மலையாள நடிகர் சங்கத் தலைவருமான மோகன்லால் Hema Committee Report குற்றச்சாட்டுகள் பற்றி முதல் முறையாக கருத்து தெரிவித்தார். அதில் “நான் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ள ‘Power group’ல் இல்லை” என்றும், “தயவுசெய்து இதை பெரிதளவில் பேசி மலையாள சினிமாவை சீரழித்துவிடாதீர்கள்” என கூறியுள்ளார்.
01/09/2024
நடிகை ராதிகா சரத்குமார் Hema Committee Report பற்றி குறுக்கியில், “நான் மலையாள சினிமாவில் நடிக்கும்போது, Caravanல் நடிகைகள் உடை மாற்றுவதை கேமரா வைத்து ரெகார்ட் செய்வார்கள். அதை ஒன்றாக சேர்ந்து பார்ப்பது வழக்கமாக இருந்தது” என தன்னுடைய மலையாள படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி Hema Committee Report பற்றி இரண்டு வாரங்களுக்கு பின் பதிலளித்துள்ளார், அதில் “அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம் மற்றும் ஆதரிக்கிறோம். அவற்றை செயல்படுத்த திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் வேறுபாடு இல்லாமல் கைகோர்க்க வேண்டிய தருணம் இது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் உள்ளது. போலீஸ் நேர்மையாக விசாரிக்கட்டும். தண்டனைகளை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்” என கூறியுள்ளார்.
02/09/2024
இயக்குனர் வெங்கட் பிரபு இந்த குற்றச்சாட்டுகளை பற்றி முன்வந்தவர்களை பற்றி புகழ்ந்து, இது போல சினிமா துறையில் மட்டுமில்லாமல், பல துறைகளில் நடந்துகொண்டிருப்பதாகவும், குற்றவாளிகள் இதுபோன்ற செயல்களை செய்ய பயப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
03/09/2024
நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய மலையாள திரைப்பட படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றியும், Caravan -ல் கேமரா வைத்து மலையாள சினிமா பிரபலங்கள் பார்ப்பார்கள் என்றும், அப்போது இருந்த சில நடிகர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைத்தார். கேரள அரசிடம் இருந்து அவரை தொடர்புக்கொண்டு பேசியதாகவும் அவர் கூறினார்.
04/09/2024
‘ப்ரேமம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகர் நிவின் பாலி. இவர் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. சினிமா பட வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள நடிகர் நிவின் பாலி, “என்மேல் சூட்டப்பட்டுள்ளது தவறான குற்றச்சாட்டு. இதை தவறு என நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
— Nivin Pauly (@NivinOfficial) September 3, 2024
05/09/2024
நடிகர் நிவின் பாலி மீதான குற்றச்சாட்டில் திருப்பம்! துபாயில் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறிய நாளில் நிவின் பாலி கொச்சின் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கிய ஆதாரம் வெளியாகியுள்ளது.
‘வருஷங்களுக்கு சேஷம்’ படப்பிடிப்பிற்காக தங்கியிருந்ததாக படத்தின் இயக்குனர் வினித் ஸ்ரீவிஸ்வசன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு நடிகை பார்வதி R. கிருஷ்ணன், அந்த நாளில் நிவின் பாலியுடன் ஒரு நிகழ்வில் பங்கேற்ற விடியோவை பதிவிட்டு சாட்சியை வலுப்படுத்தியுள்ளார்.
06/09/2024
மலையாள திரை துறையில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை தீர விசாரிக்க, கேரள உயர்நிதிமன்றம் பெண் நடுவர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து, பதிவாகும் வழக்குகளை விசாரிக்க முடிவெடுத்துள்ளது. மேலும் முழுமையான ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டை வெளியிடவும் கேரள அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.
07/09/2024
நடிகை மஞ்சு வாரியார் மலையாள திரை துறையில் நடந்து கொண்டிருக்கும் சர்ச்சை பற்றி முதல் முறையாக பதிலளித்துள்ளார். கோழிக்கோடு பகுதியில் நடிகர் டோவினோ தாமஸ் உடன் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், ” நாங்கள் ஒரு நடிகராக இங்கு நிற்பதற்கு திரி துரி தான் காரணம், துரதிர்ஷ்டவசமாக இப்படியான சர்ச்சைகள் மலையாள சினிமாவை சூழ்ந்துள்ள குற்றச்சாட்டுகள் விரைவில் நீங்கி, ரசிகர்களின் ஆதரவுடன் மீண்டும் பாதிப்புக்கப்படாமல் இருப்போம்” என கூறியுள்ளார்.
08/09/2024
WCC – Women in Cinema Collective என்ற குழுவை நடிகை ரேவதி 2017ல் முன்னணி நடிகைக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைக்கு பின் துவங்கினார். தற்போது இந்த WCC குழுவினர் அவர்கள் தரப்பிலிருந்து சில விதிமுறைகளை தெரிவித்துள்ளனர்.
- பாலியல் துன்புறுத்தல் இல்லை (பாஷ் சட்டம், 2013ன் படி). பாலியல், சார்பு அல்லது பாலின வேறுபாடு இல்லை. இனம், ஜாதி, மதம், ஜாதி அடிப்படையில் பாகுபாடு இருக்கக் கூடாது.
- போதையில் வேலையில் ஈடுபடாதீர்கள்.
- முகவர்கள் அங்கீகரிக்கப்படாத கமிஷன் பெறக்கூடாது. பணியிடத்தில் எவருக்கும் எதிராக மிரட்டல், அவதூறு, வற்புறுத்தல், வன்முறை, அறிவிக்கப்படாத தடை, சட்டத்திற்குப் புறம்பாக வேலையில் தலையிடுதல் கூடாது.
- விதிமீறல் ஏற்பட்டால் புகார் அளிக்க அதிகாரப்பூர்வ தீர்வுக் குழு – ஆகிய விதிமுறைகளை அறிவுரைகளாக தெரிவித்துள்ளனர்.

இந்த மலையாள நடிகர் சங்க தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் தற்போது உடன் 16 முக்கிய சங்க உறுப்பினர்களுடன் பதவிகளை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மலையாள நடிகை மினு முனீர், 4 பிரபல திரைத்துறையினர் மீது இந்த குற்றச்சாட்டை ஏழுப்பியுளார். இந்த குற்றச்சாட்டை பற்றி முன்னணி நடிகர்கள் பலரும் மௌனம் காத்ததும் பெரிய பிரச்சனையாக உருவானது.
Hema Committee Report -ன் தொடக்கம்
2017ம் ஆண்டில் பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகையை தன்னுடைய காரில் கடத்தியதாக பிரபல நடிகர் திலீப் மீது காவல் துறையினரிடம் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து Justice. கே. ஹேமா தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்து இது போன்ற மலையாளம் சினிமா துறையில் நடக்கும் பாலியல் வன்முறைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர அமைக்கப்பட்டது. இந்த ‘Hema Committee’ அமைத்த பின்னர் பல பேருக்கு இது போன்ற அநீதி நடந்தது தெரியவந்தது.

இந்த Hema Committee Report ஆகஸ்ட் 19ம் தேதி பொதுவுடைமை ஆக்கப்பட்ட நிலையில், பிரபல நடிகர்களும் மலையாளம் சினிமா துறையினரின் பெயர்களும் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. அதில் முக்கியமாக நடிகை மினு முனீர் தரப்பில் மட்டுமே முகேஷ், மணியன்பில்லு ராஜு, இடவேல அபு, ஜெயசூரியா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
Hema Committee report கூறுவது என்ன?
பாலியல் துன்புறுத்தல் – சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடம் அத்துமீறுவதும், பலாத்கார மிரட்டல்கள், தரக்குறைவாக சக பெண் நடிகர்களை ‘Code Name’ வைத்து அழைப்பது.
Casting Couch – பட வாய்ப்பு வேண்டுமென்றால் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவது. அப்படி ஒப்புக்கொள்ளும் பெண்களை ‘Co- operative’ நடிகைகள் என அழைப்பது.
படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு – பெண் நடிகைகளின் பாதுகாப்பு பற்றிய வரைவு. நடிகைகளின் ஹோட்டல் வரை சென்று வற்புறுத்துவதும் தகாத வார்த்தைகளால் பெண் நடிகைகள் குறித்து பேசுவது.
பாகுபாடு மற்றும் ஊதிய இடைவெளி – ஏற்கனவே திரைத்துறையில் ஆண் நடிகர்கள் மற்றும் பெண் நடிகைகளுக்கு இடையில் ஊதிய வேறுபாடு இருந்து வருகிறது. அதோடு துணை நடிகர்களும் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும் நடைமுறை.
பாலின வேறுபாடு மற்றும் சட்டப்பூர்வ ஒப்பந்தச் சிக்கல்கள் – திரைத்துறையில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தங்கள் இல்லாததாலும், பாலின வேறுபாடு இருந்து வருகிறது. இதுவே ஊதியம் மற்றும் வேலை நேரம் பற்றிய அறிவுறுத்தல்.
ஆண்கள் ஆதிக்கம் செய்யும் திரைதுறையாக மலையாள சினிமா துறை இருந்துவருவதும், இதற்கு மாற்றாக, பெண் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலருக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
AMMA சங்கத்திலிருந்து விலகும் பிரபலங்கள்
இந்த பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் பிரபல நடிகர் சித்திக்கி மீதும் குற்றம் சாட்டப்பட்டதால், அவரும் துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், கேரளா சாலச்சித்ரா அகாதமி தலைவர் பதவியில் இருந்து விளக்கினார். இவர் மீது பெங்காலி நடிகை ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் கொடுத்தார். நடிகர் சித்திக்கியின் இடத்தில மற்றொரு நடிகர் பாபுராஜ் துணை செயலாளராக தர்க்காலிகமாக பதவியேற்றார். அவரின் மீதும் பாலியல் புகார் எழுந்ததால் அவரும் பதவி விலகினார்.

மலையாள நடிகர் சங்கத்தின் சார்பில் இன்று “நாங்கள் அனைவரும் சங்கத்தை சீரமைத்து பலப்படுத்தும் திறன் கொண்ட தலைமை விரைவில் பொறுப்பேற்கும் என நம்புகிறோம்” எனக்கூறி சங்கத்தலைவர் நடிகர் மோகன்லால் மற்றும் 16 உறுப்பினர்களும் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நடிகரும் எம் எல் ஏ பதவியில் இருக்கும் முகேஷ் மீதும் குற்றச்சாட்டு பாய்ந்த நிலையில் அவரின் வீட்டிற்கு வெளியே பல போராட்டக்காரர்கள் கூடியதால் அவரின் மீதும் கவனம் கூடியது. ஆனால் அவர் இதை பற்றி எந்தவித பதிலும் அளிக்காதது சர்ச்சையாக உள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபலங்கள்
இயக்குனர் பாபுராஜ் மீது துணை நடிகை ஒருவர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், பாலியல் சீண்டல்கள் செய்ததாகவும் குற்றம் சாட்டினார். இயக்குனர் பாபுராஜ், Association of Malayalam Movie Artists (AMMA) சங்கத்தின் துணை தலைவராக இருந்தார்.
Serious allegations against malayalam actor #Siddique by an actress, claims that she was sexually abused by him at the age of 19.#HemaCommittee pic.twitter.com/oBczV5qCCk
— Deepu (@deepu_drops) August 25, 2024
Source : X (@deepu_drops)
மற்றொரு துணை நடிகை பிரபல மலையாள நடிகர் சித்திக் தன்னை இளம் நடிகையாக இருந்தபோதே பாலியல் வன்முறை செய்ததாகவும், அவர் மீது அரசாங்கம் பாதுகாப்பு அளித்தால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க தயார் என்றும் கூறியுள்ளார்.
நடிகை மினு முனீர் தரப்பில் மட்டுமே முகேஷ், மணியன்பில்லு ராஜு, இடவேல அபு, ஜெயசூரியா ஆகியோர் மீது பாலியல் தொந்தரவு தந்தாக புகார் கொடுத்துள்ளார்.
நடிகை கீதா விஜயன், இயக்குநர் துளசிதாஸ் படப்பிடிப்பின் போது தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறினார். மற்றொரு நடிகை ஸ்ரீவேதிகாவும் துளசிதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் கூறினார்.
முதல் FIR எப்போது, யார் மீது பாய்ந்தது?
2009ல் பிரபல பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, இயக்குனர் ரஞ்சித் மீது கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் mail வழியாக புகார் அளித்தார். இதை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது FIR பதிவானது. படத்தை பற்றி பேச வீட்டுக்கு அழைத்து நடிகையிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இதை விரும்பாத நடிகை கொல்கத்தாவுக்கு திரும்பியதாகவும் கூறினார்.
இந்த நடிகையின் குற்றச்சாட்டை முற்றிலும் தவிர்த்த இயக்குனர் ரஞ்சித், இந்த மாதிரியான பழியால் தான் தான் ‘பாதிக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் பதில்
‘Hema Committee Report’ உடைய தற்போதைய குற்றவாளிகளை தவிர வேறு பிரபலங்களும் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து உரித்த நடவடிக்கை எடுக்க கேரளா அரசு சார்பில் 7 பேர் கொண்ட சிறப்பு குழு அமைத்து விசாரணை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இந்த சிறப்பு குழு திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் மற்றும் இதர வேறுபாடுகளை பற்றியும் யாரையும் என கேரளா மாநில முதலமைச்சர் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hema Committee report பற்றி பிரபலங்களின் கருத்து

இது போன்ற திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை எதிர்த்து நடிகையும் இயக்குனருமான ரேவதி ஏற்கனவே எதிர் குரல் கொடுத்தார். இதற்காக Women in Cinema Collective (WCC) என்ற குழுவையும் தொடக்கி பல ஆண்டுகளாக பேசிவருகிறார். இவர் முன்னணி மற்றும் மலையாள திரைத்துறையில் சூப்பர்ஸ்டார்களாக கொண்டாடப்படும் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை பற்றி பேசாமல் இருப்பதை கண்டித்தும் உள்ளார்.
“விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்”, என முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகஸ்ட் 26ம் தேதி கூறினார்.
“குற்றம் செய்த்தவர்களுக்கு கண்டிப்பாக தயாண்டானை கிடைக்க வேண்டும். இது அடிப்படையான உரிமை. பெண்களுக்கு திரைத்துறை மட்டுமல்லாமல் அணைத்து துறைகளிலும் பாதுகாப்பு என்பது அவசியம்”, என நடிகர் டோவினோ தாமஸ் கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு தன்னுடைய X தளத்தில் இந்த பாலியல் வன்முறை பற்றி பதிவிட்டுள்ளார்
💔 This moment of #MeToo prevailing in our industry breaks you. Kudos to the women who have stood their ground and emerged victorious. ✊ The #HemaCommittee was much needed to break the abuse. But will it?
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024
Abuse, asking for sexual favors, and expecting women to compromise to…
நடிகை பார்வதி 2017ம் ஆண்டு முதலே இந்த மாதிரியான பாலியல் புகாருக்கு எதிராக குறக்கொடுத்து வந்துள்ளார். WCC சங்கத்திலும் செயல்பட்டுவரும் அவர், இதை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]