Home Cinema News  ‘டாடா’ ஹீரோயினை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகர்!

 ‘டாடா’ ஹீரோயினை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகர்!

by Sivaanantham RB

2006-ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள ‘குணா’ குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மலையாள திரைப்படம் இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீஸானது. 

பிரபல மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருந்த இந்த சர்வைவல் த்ரில்லர் ஜானர் படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி, தீபக் பரம்போல், பாலு வர்கீஸ், காலித் ரஹ்மான், ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், உலக அளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Manjummel Boys Deepak Parambol

இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்த தீபக் பரம்போல் வருகிற ஏப்ரல் 24-ஆம் தேதி பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகையான அபர்ணா தாஸ், தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், ‘பிக் பாஸ்’ கவினின் ‘டாடா’ படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். இதில் கடந்த ஆண்டு (2023) ரிலீஸான ‘டாடா’ திரைப்படம் கோலிவுட் ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.