மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்த படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ளார். சர்வைவல் த்ரில்லர் ஜானர் படமான இது 2006-ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள ‘குணா’ குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், காலித் ரஹ்மான், தீபக் பரம்போல், அருண் குரியன், ஜார்ஜ் மரியன், ராமச்சந்திரன் துரைராஜ், விஜய் முத்து, கதிரேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தற்போது, இந்த படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் இதில் நடித்த நடிகர்களை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]