Home Cinema News March 2025 – திரையரங்கில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் 

March 2025 – திரையரங்கில் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் 

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெள்ளித்திரையில் ஜொலிக்க உள்ள தமிழ் திரைப்படங்கள் ஏராளம், அதன் பட்டியலை காண்போம். 

by Shanmuga Lakshmi

ஆக்ஷன், காதல், ட்ராமா, பாண்டஸி, திரில்லர், மற்றும் பெண்களை மையப்படுத்திய கதை என பல வகையான கருப்பொருள்களை கொண்ட தமிழ் படங்கள் March 2025-ல் வெளியாகிறது. இந்த பட்டியலில் சில திரைப்படங்கள் அறிமுக இயக்குனர்களின் புதிய முயற்சியாகவும், சில படங்கள் பிரம்மாண்ட தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் பட்டியலில் தங்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் படங்களை அருகில் உள்ள திரையரங்கில் கண்டுகளிக்க தயாராகுங்கள். 

7 மார்ச் 2025 ல்  வெளியாகும் தமிழ் படங்கள் 

அட்ரஸ் 

1956-ல் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை கவரும் வகையில் ஆக்ஷன் & உணர்ச்சிகள் மிக்க படமாக உருவாகியுள்ளது.

  • நடிகர்கள் – இசக்கி பரத், அதர்வா, பூஜா ஜாவேரி, தியா, தம்பி ராமையா  
  • இயக்குனர் – ராஜமோகன் 
  • இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன் 
  • தயாரிப்பு – Cocktail Cinemas, SS Media 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

நிறம் மாறும் உலகில் 

வெவ்வேறு பெண் கதாபாத்திரங்கள் அன்னையாக அவர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கொடூரமான யதார்த்த நிகழ்வுகள் அதன் விளைவாக உருவாகும் சம்பவங்களால் அவர்களுடன் இருக்கும் மற்ற உறவுகள் சந்திக்கும் கடினமான நேரம் குறித்த திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’. 

  • நடிகர்கள் – வடிவுக்கரசி, சாண்டி, ரியோ ராஜ், பாரதிராஜா, நட்ராஜ், யோகி பாபு  
  • இயக்குனர் – பிரிட்டோ JB 
  • இசை – தேவ் பிரகாஷ் ரீகன் 
  • தயாரிப்பு – Signature Productionz, GS Cinema International 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

கிங்ஸ்டன் 

ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக சாகசம் நிறைந்த திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். தூவத்தூர் என்ற மீனவ கிராமத்தில் நிலவும் மர்மமான மரணம் அதன் பின்னணி காரணிகள் கண்டறிய மீண்டும் கடலுக்குள் செல்லும் நாயகன் நிலை என்ன ஆகிறது? அங்கு அவர் காணும் உண்மை என்ன? என்பதே கதைக்கரு.

  • நடிகர்கள் – ஜி.வி.பிரகாஷ், திவ்யா பாரதி, சேத்தன், ஆழம் பெருமாள், இளங்கோ குமரவேல், ஆண்டனி 
  • இயக்குனர் – கமல் பிரகாஷ் 
  • இசை – ஜி.வி.பிரகாஷ் 
  • தயாரிப்பு – Parallel Universe Pictures, Zee Studios 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

ஜென்டில் உமன் 

அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரி கிருஷ்ணன் திடீரென காணாமல் போக ஆன்னா என்ற பெண்ணுடன் அவரின் ரகசியமான உறவு வெளிச்சத்திற்கு வருகிறது. மேலும் அரவிந்தின் மனைவிக்கு ஆன்னாவின் வருகையால் உளவியல் & வணிக ரீதியாக எழும் பல விதமான பிரச்சனைகளை ஜென்டில் உமன்  இந்த கதை சுட்டிக்காட்டுகிறது.

  • நடிகர்கள் -லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன் 
  • இயக்குனர் – ஜோஷுவா சேதுராமன்  
  • இசை – கோவிந்த் வசந்தா 
  • தயாரிப்பு – Uthraa Productions 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

மர்மர்  

தமிழ் சினிமாவில் புது முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள ஹாரர் திரைப்படம் தான் ‘மர்மர்’.

  • இயக்குனர் – ஹேமந்த் நாராயணன் 
  • தயாரிப்பு – Stand Alone Pictures 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

ஆலம்பனா 

அலாவுதீன் கதையில் வரும் ஜீனியை போல், இந்த படத்திலும் நாயகன் அன்பு தனக்கான ஜீனி ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதன் வருகை நாயகன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது ஏமாற்றத்தை அளிக்குமா?

  • நடிகர்கள் – வைபவ், பார்வதி நாயர், ஆனந்தராஜ், யோகி பாபு, ரோபோ சங்கர், பாண்டியராஜன் 
  • இயக்குனர் – பாரி K.விஜய் 
  • இசை – ஹிப் ஹாப் தமிழா ஆதி 
  • தயாரிப்பு – KJR Studios, Koustubh 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

அஸ்திரம் 

ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் நாயகனாக மீண்டும் தோன்றும் நடிகர் ஷியாம்.

  • நடிகர்கள் – ஷியாம், நிரஞ்சனி, நிழல்கள் ரவி  
  • இயக்குனர் – அரவிந்த் ராஜகோபால் 
  • இசை – சுந்தரமூர்த்தி 
  • தயாரிப்பு – Best Movies 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

எமகாதகி 

கிராமத்தில் நிகழும் இந்த அமானுஷ்ய கதையில் கதாநாயகி முதலில் இறந்து விட்டார் என்று நம்பும் குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்கு மேற்கொள்கின்றனர். அப்போது திடீரென உயிர்த்தெழும் நாயகிக்கு யாரும் எதிர்பார்க்காத சக்தி கிடைக்கிறது. இதற்கடுத்து என்ன நிகழும் என்ற கோணத்தில் படம் பயணிக்கிறது.

  • நடிகர்கள் – ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன் 
  • இயக்குனர் – பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் 
  • இசை – ஜெசின் ஜார்ஜ் 
  • தயாரிப்பு – Naisat Media Works, Arunasree Entertainments 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

நரேந்திர பிரசாத் நடித்துள்ள ‘எமகாதகி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

லெக் பீஸ் 

யோகி பாபு நாயகனாக நடிக்கும் காமெடி திரைப்படம் ‘லெக் பீஸ்’. 

  • நடிகர்கள் – யோகி பாபு, VTV கணேஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் 
  • இயக்குனர் – ஸ்ரீநாத் 
  • இசை – ஜோர்ன் சர்ராவ் 
  • தயாரிப்பு – Hero Cinemas 
  • வெளியாகும் நாள் – 7 மார்ச் 2025

14 மார்ச் 2025 ல்  வெளியாகும் தமிழ் படங்கள்

ஸ்வீட் ஹார்ட் 

தற்கால காதலர்கள் அவர்களின் கமிட்மென்ட் மீது அவர்களுக்கு இருக்கு சமநிலையற்ற மனப்பான்மை குறித்த காமெடி கலந்த ரொமான்டிக் திரைப்படம் ‘ஸ்வீட் ஹார்ட்’. 

  • நடிகர்கள் – ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லீ 
  • இயக்குனர் – ஸ்வினீத் சுகுமார் 
  • இசை – யுவன் ஷங்கர் ராஜா 
  • தயாரிப்பு – YSR Films 
  • வெளியாகும் நாள் – 14 மார்ச் 2025

பெருசு 

சிங்கள மொழியில் ‘டென்டிகோ’ என்ற தலைப்பில் வெளியான காமெடி டிராமா படத்தின் ரீமேக் தான் தமிழில் வெளியாகவுள்ள ‘பெருசு’. 

  • நடிகர்கள் – வைபவ், நிஹாரிகா, சுனில், சாந்தினி, பால சரவணன்  
  • இயக்குனர் – இளங்கோ ராம்  
  • இசை – சுந்தரமூர்த்தி KS 
  • தயாரிப்பு – Stone Benchers 
  • வெளியாகும் நாள் – 14 மார்ச் 2025

ராப்பர் 

மெட்ரோ படத்தை இயக்கி கோலிவுட்டில் தனக்கான முத்திரை பதித்த இயக்குனர் பாண்டியின் அடுத்த திரில்லர் திரைப்படம் ராப்பர்.

  • நடிகர்கள் – சத்யா, டேனியல் ஆன்னி போப், தீபா சங்கர், ஜெயபிரகாஷ் 
  • இயக்குனர் – SM பாண்டி   
  • இசை – ஜோகன் சிவநேச  
  • தயாரிப்பு – Sakthivel Film Factory, Metro Productions 
  • வெளியாகும் நாள் – 14 மார்ச் 2025

வருணன் 

ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது அவன் வாழும் இடம், அங்கு இருக்கும் அரசியல் மற்றும் தண்ணீர்.

  • நடிகர்கள் – ராதா ரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கப்பிரியல்லா, ஹரிப்ரியா 
  • இயக்குனர் – ஜெயா வேல்முருகன்  
  • இசை – போபோ ஷஷி 
  • தயாரிப்பு – Yakkai Films  
  • வெளியாகும் நாள் – 14 மார்ச் 2025

27 மார்ச் 2025 ல்  வெளியாகும் தமிழ் படங்கள்

வீர தீர சூரன் – பார்ட் 2

மளிகை கடை உரிமையாளர் காளி. தனது குடும்பத்துடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் யாரும் அறியாத அவனின் குற்ற வாழ்க்கையில் நிகழும் எதிர்பாரா நிகழ்வு காளியின் வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது.

  • நடிகர்கள் – விக்ரம், துஷாரா விஜயன், SJ சூர்யா, சூரஜ் வெஞ்சாரமூடு 
  • இயக்குனர் – S.U.அருண்குமார் 
  • இசை – ஜி.வி.பிரகாஷ் குமார் 
  • தயாரிப்பு – HR Pictures 
  • வெளியாகும் நாள் – 27 மார்ச் 2025

Read More: ஜனவரி 2025-ல் வெளியாகிறது ‘Veera Dheera Sooran-Part: 2”

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.