ஒவ்வொரு வாரமும் டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமின்றி, நல்ல கதையம்சம் கொண்ட சின்ன படங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் அனுபவத்தை விரும்பும் ரசிகர்கள் ஏராளம். இன்னொரு புறம் பெரிய படம், சின்ன படம் என்று பார்க்காமல், எதுவாக இருப்பினும் அதை OTT-யில் வெளியான பிறகே பார்க்க விரும்பும் ரசிகர்களும் உண்டு. அவர்களுக்காக இந்த வாரம் OTT-யில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்கள் & வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ…
1.போர் :

‘கைதி’ புகழ் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடித்துள்ள படம் ‘போர்’. இந்த படம் கடந்த மார்ச் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தை ‘டேவிட், சோலோ’ போன்ற படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் டிஜே பானு, சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஜிம்ஷி காலித் & ப்ரெஸ்லி ஒஸ்கார் டி-சூசா ஒளிப்பதிவு செய்துள்ளனர், பிரியங் பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த வாரம் இப்படம் ‘நெட்ஃப்ளிக்ஸ்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.
Click To Watch Por
2.லவ்வர் :

‘குட் நைட்’ புகழ் மணிகண்டன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘லவ்வர்’. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார்.
மேலும், கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், கீதா கைலாசம், சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதனை ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – MRP எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களின் ஆதரவுடன் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிய வண்ணமுள்ளது. இந்த வாரம் இப்படம் ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.
Click To Watch Lover
3.ஜோஷ்வா இமை போல் காக்க :

பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’.
இந்த படத்தில் ஹீரோயினாக ராஹேய் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கிருஷ்ணா, கிட்டி, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி, லிசி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனை ஐசரி கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைத்துள்ளார். இந்த வாரம் இப்படம் ‘அமேசான் ப்ரைம்’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.
Click To Watch Joshua
4.பர்த்மார்க் :

‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர் ஹீரோவாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பர்த்மார்க்’. இந்த படத்தை இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.
இதில் ஷபீருக்கு ஜோடியாக மிர்னா மேனன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பி.ஆர்.வரலக்ஷ்மி, இந்திரஜித், போர்க்கொடி, தீப்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார், உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், இனியவன் பாண்டியன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த வாரம் இப்படம் ‘ஆஹா’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.
Click To Watch Birthmark
5.இன்ஸ்பெக்டர் ரிஷி :

பிரபல பெண் இயக்குநர் ஜே.எஸ்.நந்தினி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’. இதில் ஹீரோவாக நவீன் சந்திரா நடித்துள்ளார். இந்த சீரிஸ் ஹாரர் மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது.
இதில் மிக முக்கிய ரோல்களில் சுனைனா, கண்ணா ரவி, ஸ்ரீகிருஷ்ண தயாள், மாலினி ஜீவரத்னம், இளங்கோ குமரவேல், ஹரிணி சுந்தரராஜன், செம்மலர் அன்னம், மிஸா கோஷல், கஜராஜ், மைம் கோபி, தீப்தி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
10 எபிசோடுகளை கொண்ட இவ்வெப் சீரிஸ் இந்த வாரம் ‘அமேசான் ப்ரைம்’ OTT தளத்தில் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.
Click To Watch Inspector Rishi
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]