2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பான தொடக்கத்தை உருவாக்கிய தமிழ் திரைப்படங்கள் மற்றும் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட திரைப்படங்கள் எந்தெந்த OTT தளங்களில் March 7 & 8, 2025 அன்று வெளியாக உள்ளது என்பதை விவரிக்கும் வண்ணம் இந்த கட்டுரை அமைந்துள்ளது.
March 7 & 8, 2025 – OTT வெளியீடுகள்
குடும்பஸ்தன்
நடுத்தர குடும்ப ரசிகர்கள் கொண்டாடிய சிறந்த திரைப்படம் தான் ‘குடும்பஸ்தன்’. இந்த திரைப்படம் மக்களை மகிழ்விப்பது தாண்டி யதார்த்தத்தில் ஒரு குடும்பம் அதில் பணம் என்ற ஒரு முக்கிய காரணத்தால் விளையும் சிக்கல், மனக்கசப்பு, அவமானம் என பல்வேறு வகையான உணர்வுகளை பார்ப்பவர்கள் தங்களுடன் தொடர்பு கொண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி.
- நடிகர்கள் – மணிகண்டன், குரு சோமசுந்தரம், சௌந்தர்ராஜன், சான்வி மேகனா
- இயக்குனர் – ராஜேஷ்வர் காளிசாமி
- OTT யில் வெளியாகும் நாள் – மார்ச் 7, 2025
- OTT தளம் – Zee5
குழந்தைகள் முன்னேற்ற கழகம்
யோகி பாபு முன்னணி நாயகனாக நடித்த ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ அரசியல் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பள்ளியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் மாணவர்கள் நடத்தும் தேர்தலில் வெற்றி பெற பல தில்லாலங்கடி வேலைகள் செய்கின்றனர் அதே போல் மக்களின் நலனை பேண வேண்டிய அரசியல்வாதிகளின் தேர்தல் மறுபுறம் நடைபெறுகிறது. இந்த இரு வேறு உலகத்தில் ஒரு வெற்றிக்காக ஜனநாயகத்திற்கு எதிராக என்னென்ன முரண்பாடுகள் நிகழ்கிறது என்பது போன்ற விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
- நடிகர்கள் – யோகி பாபு, பவஸ், மயில்சாமி, செந்தில்
- இயக்குனர் – ஷங்கர் தயால்
- OTT யில் வெளியாகும் – மார்ச் 7, 2025
- OTT தளம் – ஆஹா தமிழ்
தண்டேல்
தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் ‘தண்டேல்’ சத்யா மற்றும் ராஜு என்ற காதலர்களின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும் ஒரு நிகழ்வு அவர்களை நிரந்தரமாக பிரித்துவிடுமா விதி? என்ற கோணத்தில் கதைக்களம் நகர்கிறது.
- நடிகர்கள் – சாய் பல்லவி, நாக சைதன்யா
- இயக்குனர் – சந்தூ மொண்டேட்டி
- OTT யில் வெளியாகும் நாள் – மார்ச் 7, 2025
- OTT தளம் – Netflix
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]