பா.இரஞ்சித் தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப்படம் இயக்கும்போதே நீலம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அடுத்து இன்னொரு படம் மாரி செல்வராஜ் இயக்கவேண்டும் என்பது ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் நீண்ட கால தாமதத்துக்குப்பிறகு இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

‘பரியேறும் பெருமாள்’ படம் வெற்றிபெற்றதுமே துருவ் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளைத் தொடங்கினார் மாரி செல்வராஜ். ஆனால், கலைப்புலி தாணு தனுஷுக்கு ஒரு படம் செய்யவேண்டும் எனக் கேட்க ‘கர்ணன்’ படம் உருவானது. ‘கர்ணன்’ முடித்துவிட்டு துருவ் விக்ரம் படத்தை இயக்குவார் மாரி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதயநிதியின் கடைசி படம் என ‘மாமன்னன்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நீலம் தயாரிப்புக்கான துருவ் விக்ரம் படம் இப்போது கைகூடியிருக்கிறது.

‘பைசன் காளமாடன்’ எனப்பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்தில் நடித்த மலையாள நடிகர் லால், கதாநாயகியாக நடித்த ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு எழில் அரசு.
Mari Selvaraj – Dhruv Vikram – Pa. Ranjith இணையும் Bison படத்தின் ஸ்பெஷல் அப்டேட்!
பைசன் காளமாடன் ஒரு கபடி வீரனின் வாழ்க்கை வரலாற்று கதையாகும். படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]