சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நடிகர் கவின், அடுத்தபடி வளர்ச்சியாக கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள Lift, Dada, Star போன்ற படங்கள் தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கிடையில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது நடிகர் கவின் இந்த வருடமும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் கூட அவரது புதிய படமான Kiss படத்தை பற்றிய தகவல் வெளியாகியிருந்தது.
அதை தொடர்ந்து, தற்போது கவினின் புதிய முகமான Mask திரைப்படத்தை பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் தயாரிப்பில், விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ள படம் தான் Mask. இப்படத்திற்கு நடிகரும், இயக்குனருமான ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Mask படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு புறம் கவின், முகமூடி தயார் செய்யும் பொருட்களுடனும், முகமூடி ஒன்றை கையில் வைத்து பணம் நிறைந்த இடத்தில் இருப்பது போன்றும், மறுபுறம் ஆண்ட்ரியா, இதுவரை இல்லாத மாறுபட்ட தோற்றத்தில் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
Proud to be associated with #Vetrimaran sir,@gvprakash bro, @andrea_jeremiah , @PeterHeinOffl master, @RDRajasekar sir.
— Kavin (@Kavin_m_0431) February 26, 2025
Alongside the talented team of #MASK@Raasukutty16 @GrassRootFilmCo @BlackMadra38572 @iRuhaniSharma #RamarEditor @jacki_art @RIAZtheboss @PoorthiPravin… pic.twitter.com/EMMUi0zmyL
கவின் தனது உண்மை முகத்தை மறைத்து கொள்ளையடிப்பவராக நடித்திருப்பாரா? அல்லது ஆண்ட்ரியாவின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் கதாநாயகனாக நடித்திருப்பாரா? இப்படத்தில் ஆண்ட்ரியா மற்றும் கவின் கூட்டாளியாக நடித்திருப்பார்களா? அல்லது எதிரும் புதிருமாக நடித்துள்ளார்களா?என பல கேள்விகள் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் எழுகிறது. மேலும், இந்த போஸ்டரில் வாத்தியாராக வெற்றிமாறன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்புக்கு கரணம் இப்படத்திற்கு அவர் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது இப்படத்தில் வெற்றிமாறனும் நடித்துள்ளாரா? அப்படி நடித்திருந்தால் எந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

மேலும், ‘துப்பறிவாளன்’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா இப்படத்திலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு கேள்விகளுடனும், கவின் மற்றும் ஆண்ட்ரியாவின் மாறுபட்ட கதாபாத்திரத்துடனும், பல உண்மை முகங்களை உள்ளடக்கிய திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் Mask படத்திற்கான வெளியீட்டு தேதி போன்ற மற்ற அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவின் நடித்திருந்த மற்ற படங்களை போலவே இப்படமும் ரசிகர்களுக்கிடையில் பெரும் வரவேற்பை பெரும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mask படத்தின் படக்குழு
நடிகர்கள் | கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மாபாலா சரவணன்,சார்லி, VJ அர்ச்சனா சந்தோக் |
தயாரிப்பாளர் | வெற்றிமாறன் |
இசையமைப்பாளர் | ஜி.வி பிரகாஷ் குமார் |
இயக்குனர் | விகர்ணன் அசோக் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]