இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்‘. ஏற்கனவே விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த ‘சலீம்’ படத்தின் தொடர்ச்சூயாக எடுக்கப்பட்டுள்ளது இந்த படம்.

படத்தின் மூலம் இயக்குனர் சொல்லவந்த கதையும் கருத்தும் நன்றாக உள்ளது. ‘ தீயவனை அல்ல தீமையை அளிப்போம்’ என்ற கருத்தை சொல்லிவிட்டு படம் முழுக்க தீயவர்களை கதாநாயகன் பதம் பார்த்து கடைசியில் எப்படி அதை முடிவாக்கிறார் என்பது சுவாரசியமான கதை தான்.
படத்தின் கதைகளம்
‘சலீம்’ படத்தின் முடிவில் அமைச்சரின் மகனை கொன்று, சலீம் தப்பி தலைமறைவாகிவிடுவார். அப்போது இந்திய ராணுவத்தில் சேர்ந்து அவருடைய Chief சரத்குமாரின் தங்கையை காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். இருவரும் மழையில் நனைந்து கொண்டிருக்கும்போது அவரின் மனைவியை பகைவர்கள் கொன்றுவிட, மழை பிடிக்காமல் தனிமையில் வாழ்கின்றார் படத்தின் நாயகன்.

அப்படி அந்தமானுக்கு செல்லும் அவர் அங்கு அவரின் கடந்த காலத்தை மறந்து வாழ நினைக்கிறார் ஆனால் அஙக்உ நடக்கும் பிரச்சனைகளால் மீண்டும் தீயவர்களை அழிக்க தொடங்குகிறார்.
அவரின் துணையாக படத்தில் வருவது ஒரு நாய். மழை பிடிக்காத அவரை முதல் முறையாக மழையை சீண்ட வைத்து, பின்னர் முழுமையாக தனது கூண்டில் இருந்து மீட்கும் தோணியில் வரும் காட்சிகள் படத்தில் நகர்வை காட்டுகிறது.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஆண்டனியின் நீண்ட வசனங்களும் அங்கு இயக்குனர் வைத்துள்ள டுவிஸ்டும் கணிக்கும்படியாக உள்ளது. சமீபத்தில் வரும் பெரும்பாலான படங்களை போல் ‘மழை பிடிக்காத மனிதன் 2’ வருவதற்கான ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
படத்தின் கதாப்பாத்திரங்கள்
கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி சீரியஸான ஒரு கதாப்பிரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். மனைவியை இழந்த துயரத்தில் இருகியிருக்கும் ஒரு நபராக நடித்துள்ளார். படத்தில் உள்ள சண்டை காட்சிகளில் அவரின் ஆக்ஷன் அதிரடியாக இருந்தாலும் படத்தில் ஒளிப்பதிவு அடிக்கடி மாற்றம் பெற்று தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது. முக்கியமாக சண்டை காட்சிகளில் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாய் உடன் அவரின் காட்சிகள் அவரின் பாத்திரத்தில் ஏற்படும் மாற்றங்களை காமித்தது.

சரத் குமார் மற்றும் சத்யராஜ் இருவருமே கம்மியான காட்சிகளில் வந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட வசனங்களை பேசி செல்கிறார்கள்.
சரண்யா பொன்வண்ணன் இயல்பான பாசமான அம்மாவாக அத்தோ கடை நடத்திவரும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆழமான கருத்துக்களை பேசி, விஜய் ஆண்டனிக்கு அடைக்கலம் கொடுக்கும் நபராக படம் முழுவதும் வருகிறார்.
கன்னடத்தில் ‘தியா’ படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பிருத்வி ஆம்பர் ஒரு ஜாலியான கதாப்பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். அவருக்கு இந்த படத்தில் அதிக காட்சிகள் அமைந்து நடிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

நடிகை மேகா ஆகாஷ் அழகாக வந்து, படத்தில் வில்லனுக்கும் விஜய் ஆண்டனியின் பாத்திரத்துக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறார்.

படத்தின் வில்லன் நடிகர் தனஞ்செய் சற்று பொருந்தாமல் தத்தி தத்தி தமிழ் பேசும் இயல்பான தமிழ் பட வில்லனாக வருகிறார்.
படத்தின் பலம்
படத்தை இயக்குனர் தொடங்கிய விதமும், விஜய் ஆண்டனியின் கதாப்பாத்திரத்திற்கு ஒரு flashback வைக்காமல் முதல் 5 நிமிடத்தில் காட்டியது கதைக்களத்தை எளிதில் புரிய வைத்தது.
இயக்குனர் விஜய் மில்டன் சொல்ல வந்த கருத்தை கதையோடு பொருத்தி அமைந்த க்ளைமாக்ஸ்.
படத்தின் பலவீனம்
ஆக்ஷன் காட்சிகளில் சலிப்பை ஏற்படுத்தும் ஒளிப்பதிவு பார்ப்பவர்களை ஈர்க்க மறுக்கிறது.
படத்தின் திரைக்கதை தொடர்ச்சி இல்லாமல் உள்ளது. இயக்குனர் விஜய் மில்டன் இந்த படத்தை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருப்பது திரைக்கதையில் தளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ நீளமான ஒரு கருத்துள்ள கதையாக அமைந்துள்ளது. அந்த கருத்தும் க்ளைமாக்ஸில் வெளிவருவது சலிப்பாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]