இந்தியாவில் ஹிந்தி சினிமாவில் தொடங்கிய Me Too சர்ச்சை தொடங்கியபின் தமிழ் சினிமாவிலும் தனக்கு நடந்த பாலியல் வன்முறைகளை பகிர ஆரம்பித்தனர். இந்த சர்ச்சையின் தொடக்கம் மற்றும் இன்றைய நிலவரம் வரை பல தகவல்கள்.
தமிழ் சினிமாவின் Me Too சர்ச்சை துவக்கம்
2018ம் ஆண்டு பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் அளித்தார். தன்னுடைய தளத்தில் #MeToo என்ற ஹாஷ்டாக் வைத்து பதிவிட்டார். அதில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துக்க முயற்சித்ததாகவும், அவரின் விருப்பத்துக்கு இணங்காததால் தன்னை மிரட்டியதாகவும் பகிர்ந்தார்.

சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை கச்சேரியில் அனைவரும் சென்ற பின்னர் நடிகை சின்மயி அவரின் அம்மாவுடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், வைரமுத்துவிடம் இருந்து தனியாக அழைப்பு வந்ததாகவும் ஆவர் இனையத்தில் பதிவிட்டார். தனியாக சந்திக்க மறுத்ததால் “உனக்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிடைக்காது!” என மிரட்டியதாகவும் அந்த பதிவில் கூறினார்.
மலையாளம் சினிமாவை உலுக்கிய Hema Committee report – இந்தியாவின் பேசுபொருளாக மாறியது எப்படி?
வைரமுத்து மீது குவிந்த பாலியல் புகார்கள்
பாடகி சின்மயி வெளிவந்துபுகார் தெரிவித்த பிறகு அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞர் சிந்துஜா ராஜாராம் முன்வந்து தன்னுடைய கதையை கூறினார். அதில் அவர் 18 வயதானபோது சென்னையில் தங்கியிருந்தபோது தன்னிடம் தவாராக நடந்துகொண்டதாக கூறினார். தன்னை காதலிப்பதாகவும், அவருக்காக கவிதைகள் எஸுத்தியிருப்பதாகவும் அவரை தனியாக அழைத்ததை பற்றியும் வெளிப்படையாக கூறினார்.
Mr. Vairamuthu is a molester. He threatens people with his political connections. This is fact.
— Chinmayi Sripaada (@Chinmayi) May 29, 2021
Many, many women.
No matter how many come forth & shame me – truth doesn't change. I am not scared.
Believe whatever you want henceforth.
I will *not* be clarifying this anymore.
மற்றொரு பாடகியான புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் அளித்ததாக கூறினார். வைரமுத்துவின் குடும்பத்தினருக்கும் அவரின் இந்த முகம் பற்றியும் அவரின் வன்முறைகள் பற்றியும் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மொத்தமாக இதுவரை 17 பெண்கள் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். அனால் அதில் 4 பெண்கள் மட்டுமே தன்னுடைய பெயரை வெளிப்படுத்தி பேசியுள்ளனர்.
நடிகர் அர்ஜுன் மீதான பாலியல் புகார்

நிபுணன் படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது தவறாக நடந்துகொண்டதாக நடிகர் அர்ஜுன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனால் ஆதாரம் இல்லை என்றும், 5 கோடிக்கு அவதூறு வழக்கு பதிவு செய்தார் நடிகர் அர்ஜுன். பல வருடங்கள் முடிந்தபின்னும் ஆதரம் இல்லாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நடிகர் ராதா ரவி மீது சின்மயி குற்றசாட்டு
பாடகி சின்மயி மேலும் ஒரு திரை பிரபலமான சண்டிகர் ராதா ரவி மீது குற்றம் சாட்டினார். இதை பற்றி பதிவிட்ட அவர், இப்படி குற்றம் சாட்டினால் தனக்கு டப்பிங் வாய்ப்புகள் வராமல் இருக்கலாம் இன்றும் கூறினார். இதனை தொடர்ந்து, டப்பிங் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் ராதா ரவி பாடகி சின்மயியை சங்கத்திலிருந்து விளக்கினார்.
இயக்குனர் சுசி கணேசன் மீது அமலா பால் புகார்
இயக்குனர் லீனா மணிமேகலை, 2005ல் இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார். இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் யாரும் இச்செய்தியை பேசவில்லை. அனால் ‘திருட்டு பயலே 2’ படத்தில் நடித்தபோது நடிகை அமலா பாலிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், “பெண்கள் மீது மிக குறைவான மரியாதையை கொண்டவர் சுசி கணேசன்” என்றும் அவர் கூறினார்.
நடிகர் ஜான் விஜய் மீது பாய்ந்த Me Too
Shortly after my #MeToo tweet, John Vijay's wife reached out to me to hear about it firsthand. She also messaged apologizing on his behalf. I truly appreciate the way she conducted herself (i.e. not blind siding) Now he has too. @NOTamitbhargav@Chinmayihttps://t.co/GPYGvtaLha
— Sriranjani T S (@Sri_TS) October 17, 2018
தொலைக்காட்சிகளில் VJவாகவும் பாடகியாகவும் இருப்பவர் ஸ்ரீரஞ்சனி. திரைப்பட நடிகர் ஜான் விஜய் அவரிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டதாகவும், ஜான் விஜய் ஒரு வக்கிர புத்தியுடையவர் என்றும் காட்டமாக Me Too சர்ச்சையில் குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து, ஜான் விஜய்யின் மனைவி ஸ்ரீரஞ்சனியை தொடர்புகொண்டதாகவும், அவரின் செயலுக்கு மன்னிப்புக்கு கேட்டதாகவும், ஆனால் ஜான் விஜய்யிடமிருந்து எவ்வித மன்னிப்பும் அவர் பெறவில்லை என்றும் அவர் பதிவிட்டார்.
இயக்குனர் தியாகராஜன் மீதான Me Too புகார்

பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், 2011ம் ஆண்டு ‘பொன்னர் சங்கர்’ படப்பிடிப்பில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய ப்ரீத்திகா மேனன் உடைய ஹோட்டல் கதவை தட்டியதாகவும், அவர் திறக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த இயக்குனர் தியாகராஜன், ப்ரீத்திகா மேனன் மேல் அவதூறு வழக்கு பதிவிடுவேன் என்றும் கூறினார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]