மருத்துவராக படிப்பை முடித்து, மாடலாக தொடங்கிய காரியரை சரியாக பயன்படுத்தி தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர காத்திருக்கும் மீனாக்ஷி சௌத்ரி.
ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா பகுதியில் பிறந்தார் மீனாக்ஷி சௌத்ரி. இவரது தந்தை BR. சௌத்ரி இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தார். பள்ளிப்படிப்பை சண்டிகரில் உள்ள செயின்ட் சோல்ஜர் இன்டர்நேஷனல் கான்வென்ட் பள்ளியில் முடித்தார்.

மாநில அளவிலான நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். சௌத்ரி பஞ்சாபில் உள்ள தேசிய பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தார்.
2017-ல் இந்திய இராணுவ அகாடமி சௌத்ரி மிஸ் IMA ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் ஹரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் வென்று 2018 -ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா கிராண்ட் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார்.

மேலும் அதே ஆண்டு மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டு முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
2019 -ல் மே மாதம் The Times Of India நடத்திய இணைய வழியாக கணக்கெடுப்பில் இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க 50 பெண்கள் பட்டியலில் 2 -வது இடத்தை பெற்றார்.

2019 -ல் ஃபெமினா மிஸ் இந்தியா துணைப் போட்டியில், மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் சார்பாக அவர் செய்த சாதனைகளுக்காக மிஸ் இந்தியா அமைப்பால் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு மாடலிங் துறையில் இளம்வயதிலேயே குறிப்பிடத்தகுந்த வகையில் சாதித்துள்ளார். மாடலாக இருந்து வந்த நிலையில் சினிமாவில் முதன் முதலில் “Out Of Love” என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தார்.
அதை தொடர்ந்து “இச்சட வாகனமுலு நிலுபரடு” என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். 2022-ல் ரவி தேஜாவின் கில்லாடி படத்தில் நடித்து கவனம் பெற்றார்.தெலுங்கில் Hit : The Second Case என்ற திரில்லர் திரைப்படத்தில் லீட் ரோலில் ஒருவராகவும் நடித்துள்ளார்.

தமிழில் பாலாஜி K குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரித்திகா சிங்க், மீனாக்ஷி சௌத்ரி, ராதிகா, முரளி சர்மா நடிப்பில் வெளியான “கொலை” படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்தார்.
கோகுல் இயக்கத்தில் RJ. பாலாஜி, சத்யராஜ், லால், மீனாக்ஷி சௌத்ரி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது விஜய் நடிப்பில் வரவுள்ள GOAT படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கவுள்ளார். நடிக்க தொடங்கிய 3,4 வருடத்திலேயே ரவி தேஜா, மகேஷ் பாபு, விஜய் ஆண்டனி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து கவனம் பெற்றுள்ளார்.
மீனாக்ஷி சௌத்ரி நடிப்பில் வெளியான படங்கள்.
படங்கள் | நடிகர்கள் | இயக்குனர் | வெளியான தேதி |
கொலை | விஜய் ஆண்டனி, மீனாக்ஷி சௌத்ரி, ரித்திகா சிங்க் | பாலாஜி K குமார் | 21 ஜூலை 2023 |
சிங்கப்பூர் சலூன் | RJ. பாலாஜி, சத்யராஜ், லால், மீனாக்ஷி சௌத்ரி | கோகுல் | 25 ஜனவரி 2024 |
GOAT | விஜய், பிரபு தேவா, பிரசாந்த், மீனாக்ஷி சௌத்ரி, மோகன், ஜெய்ராம் | வெங்கட் பிரபு | 5 செப்டம்பர் 2024 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]