Home Cinema News கோலிவுட் இயக்குனர்கள் இயக்கிய mega serial பற்றி தெரியுமா?

கோலிவுட் இயக்குனர்கள் இயக்கிய mega serial பற்றி தெரியுமா?

வெற்றி படங்களை இயக்கிய கோலிவுட் இயக்குனர்கள் சின்னத்திரையில் இயக்கிய mega serial-ன் பட்டியல்.

by Shanmuga Lakshmi

பொதுவாக பெரிய திரையில் வெற்றி பெற்ற நடிகரோ நடிகையோ சின்னத்திரையில் நடிப்பது வழக்கம் ஆனது. ஆனால் கோலிவுட்டில் வெற்றி பெற்ற இயக்குனர்கள் சின்னத்திரைக்கு வருவது மிகவும் அரிதான ஒன்று. அந்த பிம்பத்தை உடைத்து வெற்றியடைந்த mega serial-களை கொடுத்த பல முன்னணி இயக்குனர்கள் பட்டியலை காண்போம்.

கே.பாலச்சந்தர் 

k balachander
Source Image:@@telugufilmnagar(Twitter)

இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்குவதற்கு முன் மேடை நாடகங்களை எழுதி இயக்கி வந்தார். அதன் பிறகு வசனகர்த்தாவாக “தெய்வத்தாய்” (1964) படத்தில் அறிமுகம் ஆகி பின்னர் 1965-ல் வெளியான “நீர்க்குமிழி” படத்தில் இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். வித்யாசமான கதை களங்கள் மற்றும் கணிக்க முடியாத கிளைமாக்ஸ் அவர் இயக்கத்தின் பலமாக கருதப்பட்டது. சின்னத்திரையில் அவர் பல mega serial-களை இயக்கியுள்ளார், சிலவற்றை அவரின் தயாரிப்பு நிறுவனம் ஆன ‘கவிதாலயா’ தயாரித்து வெளியிட்டுள்ளது.

Mega serial-ன் பெயர்வருடம் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் பெயர் 
ரயில் சிநேகம் 1989தூர்தர்ஷன் விவேக், நிழல்கள் ரவி, கவிதாலயா கிருஷ்ணன், இந்திரா, அமுதா
ரகு வம்சம் 90-களின் இடையில் சன் டிவி ஜெய் கணேஷ், வேணு அரவிந்த், நித்யா ரவீந்திரன், கவிதாலயா கிருஷ்ணன் 
கையளவு மனசு 1994சன் டிவி/ராஜ் டிவி கீதா, வரதராஜன், சித்ரா, பிரகாஷ் ராஜ், சாரு ஹாசன், ரேணுகா 
காதல் பகடை 1996சன் டிவி ரஹ்மான், மோகினி, ரூபா ஸ்ரீ, யுவராணி, ரேணுகா, T.V.வரதராஜன்
ஜன்னல் 1996சன் டிவி லட்சுமி. SP பாலசுப்ரமணியம் 
ப்ரேமி 1996சன் டிவி ரேணுகா, பாம்பே ஞானம், தீபா வெங்கட்
சஹானா 2003ஜெயா டிவி YG மகேந்திரன், அனுராதா, கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ் ராஜ், கிருஷ்ணா, சுலக்ஷனா, பாம்பே ஞானம் 
அமுதா ஒரு ஆச்சரியக்குறி 2012கலைஞர் டிவி ரேணுகா, காவ்யா, சோனியா, அப்சர், கவிதாலயா கிருஷ்ணன் 
காதல் வாங்கி வந்தேன்  சன் டிவி குயிலி, ஜெய் கணேஷ், அரவிந்த் கதாரே, மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன்

பாலுமகேந்திரா 

k balachander
Source Image:@SathyaJyothi (Twitter)

மனதை உருக்கும் உணர்ச்சிகளை தனது இயல்பான காட்சி அமைப்பில் காட்டும் வல்லமை கொண்டவர் இயக்குனர் பாலுமகேந்திரா ஆகும். கோலிவுட் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் பல இயக்குனர்களின் குரு இவர் தான். ஒளிப்பதிவாளராக தொடங்கிய இவரின் சினிமா பயணம் தான் ஒரு காட்சியில் இடம் பெறும் பொருள், நடிகர்கள், சூழ்நிலை, இயற்கை என இவற்றின் வாயிலாக கதைகளை மிகவும் அழகாகக் கூறுவார். மொத்தம் 48 எபிசோடுகள் கொண்ட நாடகங்களை இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு தலைப்பில் அமைந்திருக்கும்

 பாடகி P. சுசீலா மற்றும் பாடலாசிரியர் மு மேத்தாவிற்கு கலைஞர் நினைவு விருது! 

.

வருடம் ஒளிபரப்பாகும் தளம் நடிகர், நடிகைகள் பெயர் 
2000Youtube மௌனிகா, டெல்லி கணேஷ், மோகன் ராமன், சஷிகுமார் சுப்பிரமணி, ஆடுகளம் நரேன், சுஜிதா, ஆகாஷ்  

பாரதிராஜா 

Bharathiraja
Source Image:@offBharathiraja(Twitter)

மண் மனம் மாறாத கிராமங்களை 80-களில் அழகாக காட்சிப்படுத்தி “16 வயதினிலே” என்ற மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா ஆகும். அதன் பிறகு பல வித்யாசமான கதைகளை இயக்கி தனக்கான தனித்துவத்தை வெளிக்காட்டி புகழின் உச்சிக்கு சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையிலும் அறிமுகம் ஆகி தடம் பதித்துள்ளார்.

Mega serial-ன் பெயர்வருடம் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் பெயர் 
தெக்கத்தி பொண்ணு 2008கலைஞர் டிவி நெப்போலியன், ரஞ்சிதா, புவனேஸ்வரி, ஸ்வர்ணமால்யா, சந்திரசேகர், பிரகதி, தேவிப்பிரியா 
அப்பனும் ஆத்தாலும் கலைஞர் டிவி சுகன்யா, விக்னேஷ், மலர், அமுதா, தனுஷா, பிரதீபா

மனோபாலா 

Manobala
Source Image:@offBharathiraja(Twitter)

நடிகர் மனோபாலா அவர்கள் தற்போது உள்ள இளைஞர்களுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனார். ஆனால், அவரின் பயணம் 1970-ல் இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் ஆக தொடங்கியது. அதன் பிறகு 1982-ல் இயக்குனர் ஆக “ஆகாய கங்கை” படத்தில் அறிமுகமானார். இயக்குனராக 24 படங்கள் இயக்கி உள்ளார். அதன் பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். சின்னத்திரையில் அவர் மூன்று mega serial-களை இயக்கியுள்ளார்.  

Mega serial-ன் பெயர்வருடம் தொலைக்காட்சி
பஞ்சவர்ணம் 1999சன் டிவி 
புன்னகை 2000சன் டிவி 
7772009பாலிமர் டிவி 

Commercial ஆக்ஷன் மற்றும் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நந்தினி, மாயா, லட்சுமி ஸ்டார், ஜோதி” போன்ற   mega serial-ஐ எழுதி, தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதை, வசனம், மற்றும் திரைக்கதை திரைப்படங்களில் மட்டும் அல்ல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் mega serial-க்கும் மிகவும் முக்கியம் என்பதை கோலிவுட்டின் முன்னணி ஜாம்பவான் இயக்குனர்கள் நிரூபித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.