தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக கதாநாயகனாக புகழின் உச்சியில் இருந்து வரும் “கொனிடேலா சிவசங்கர வரபிரசாத்” என்ற Mega Star சிரஞ்சீவி…
இந்திய சினிமாவை பொறுத்தவரை கமல் ஹாசன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி ஆகிய 5 பேர் மட்டுமே ஆரம்பம் முதல் இன்று வரை கதாநாயகனை மட்டுமே நடித்து வந்துள்ளனர். வேர் நடிகர்கள் வில்லன், கதாநாயன், துணை நடிகர்கள் என தனது வயதிற்கேற்ப கேரக்டர்களில் நடித்து வந்துள்ளனர்.
கதாநாயகனாக அறிமுகமானத்தில் இருந்து இன்றுவரை ஹீரோவாக நடித்து வந்த சிரஞ்சீவி தெலுங்கு உலகில் முன்னணி நடிகர்களாக இருந்து வந்த NTR, நாகேஸ்வர் ராவ், கிருஷ்ணா ஆகியோர் புகழின் உச்சியில் இருக்கும் போது தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.
சினிமா பின்புலம் இல்லாமல் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தில் 23 வயது இளைஞனாக தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவரும் ரஜினிகாந்த் போல ஆரம்ப சினிமா வாழ்வை வில்லனாக தொடங்கினார்.
பின்னர் படிப்படியாக ஹீரோவாக நடிக்க தொடக்கி தெலுங்கு சினிமாவில் அதிக படங்களை ஹிட் கொடுத்து சாதனை படைத்தார். கிட்டத்தட்ட 8 படங்கள் அன்றைய காலகட்டத்தில் அதிக வசூல் செய்து தெலுங்கு சினிமாவில் யாரும் செய்திடாத சாதனையை படைத்தார்.
சிரஞ்சீவி, ஆந்திரப் பிரதேசத்தில் கொனிடேலா வெங்கட ராவ் மற்றும் அஞ்சனா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். “கொனிடேலா சிவசங்கர வரபிரசாத்” என்ற பெயரில் வளர்ந்து வந்த இவர் தீவிர ஆஞ்சிநேய பக்தர் என்பதால் சினிமாவில் நுழைந்த பிறகு சிரஞ்சீவியாக தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
பள்ளிப்படிப்பில் போது NCC கேடட் ஆக இருந்து வந்தார். மேலும் 1970 -களில் புது டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சிரஞ்சீவி சென்னைக்கு குடிபெயர்ந்து 1976 -ல் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார்.
தனக்கு முன்னாள் அங்கு பயின்ற ரஜினிகாந்த் சினிமாவில் கலக்கிவந்ததால் தனக்கும் நம்பிக்கை கிடைத்தது. ஹீரோவாக நடிப்பதற்கு நல்ல நடிப்பு இருந்தால் போதும் என்று ரஜினிகாந்த் -ன் சினிமா பயணம் சிரஞ்சீவிக்கு உந்துகோலாக இருந்தது என்று சிரஞ்சீவி பின்னாளில் கூறியிருந்தார்.

சிரஞ்சீவி தனது திரைப்பட வாழ்வை “புனாதிரல்லு” என்ற படத்தின் மூலம் தொடங்கினார். ஆனால் முதலில் “பிராணம் கரீது” என்ற படம் தான் ரிலீஸ் ஆனது. பின்னர் தொடர்ந்து நடித்து வந்த சிரஞ்சீவி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “ஐ லவ் யூ” படத்திலும், கே. பாலச்சந்தரின் “இடி கத காடு” ஆகிய படங்களில் வில்லன் ரோலில் நடித்திருந்தார்.
அவர்கள் என்ற தமிழ் திரைப்படத்தின் ரீமேக்கில் தமிழில் ரஜினிகாந்த் நடித்த கேரக்டரில் தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி நடித்தார். சிரஞ்சீவி நடிப்பில் 1979 ஆம் ஆண்டில் 8 திரைப்படமும், அடுத்த ஆண்டில் 14 படங்களும் வெளிவந்தன.
1983 -ல் வெளியான “கைதி” படம் சிரஞ்சீவி சினிமா வாழ்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஆக்சன் ஹீரோவாக சிரஞ்சீவியை கொண்டாடியது அந்த படம். அந்த காலகட்டத்திலேயே அதிக பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து கலக்கியது.
ஆக்சன், நடிப்பு, டான்ஸ் என பக்க கமர்சியல் ஹீரோவாக பின்ன வரும் படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து தமிழில் ஹிட் அடித்த நட்ப்புக்காக படத்தை “சிநேகம் குசம்” என்று தெலுங்கில் சரத்குமார் கேரக்டரிலும், வசூல் ராஜா MBBS படத்தை சங்கர் தாதா MBBS என்ற பெயரில் தெலுங்கில் நடித்திருந்தார்.
தாகூர், ஸ்டாலின், இந்திரா போன்ற மாஸ் ஹிட் படங்களையும் தந்துள்ளார். ஸ்டைல், மஹாதீரா, பரூஸ்லி, ஹன்ட்ஸ் அப் போன்ற படங்களில் காமியோ ரோலில் வந்து அசத்தியிருப்பார்.
தமிழில் 47 நாட்கள், ராணுவ வீரன், மாப்பிள்ளை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். பிலிம்பேர் விருது, நந்தி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
1998 -ல், சிரஞ்சீவி “சிரஞ்சீவி அறக்கட்டளை” (CCT) நிறுவி இரத்த மற்றும் கண்தான வங்கிகளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் 9,000 நபர்கள் அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து “சிறந்த தன்னார்வ இரத்த வங்கி விருது” தொடர்ந்து 5 வருடங்களாக வாங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமா உலகில் சிரஞ்சீவியை தொடர்ந்து அவரது மகன் ராம் சரண், சகோதரர்கள் நாகேந்த்ரா பாபு, பவன் கல்யாண். மேலும் அல்லு அரவிந்த் திரைப்பட தயாரிப்பாளர். நடிகர்கள் அல்லு அர்ஜுன், வருண் தேஜ், நிஹாரிகா, சாய் தரம் தேஜ், பஞ்ச வைஷ்ணவ் தேஜ் மற்றும் அல்லு சிரிஷ் என தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் சிரஞ்சீவி குடும்பத்தை சார்ந்தவர்களே.
2008 -ல் சிரஞ்சீவி தனது அரசியல் கட்சியான “பிரஜா ராஜ்யம் கட்சி” என்ற பெயரில் ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியில் தொடங்கினார். 2009 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சிரஞ்சீவி கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று 16% வாக்கு சதவீதத்தை பெற்றது.
பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கட்சியை இணைத்து விட்டார். சிரஞ்சீவி ராஜ்யசபா MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சுற்றுலாத்துறைக்கான மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.
சினிமா, அரசியல், பொது சேவை என மக்கள் நலனுக்காக ஆந்திர பிரதேசத்தில் தன்னால் முடித்த உதவிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார் சிரஞ்சீவி.
தமிழில் சிரஞ்சீவி நடித்த சில படங்கள்.
படங்கள் | வெளியான தேதி | நடிகர்கள் | இயக்குனர் |
47 நாட்கள் | 3 செப்டம்பர் 1981 | சிரஞ்சீவி, ஜெயா பிரதா, சரத் பாபு | K. பாலசந்தர் |
ராணுவ வீரன் | 26 அக்டோபர் 1981 | ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, நளினி | SP. முத்துராமன் |
மாப்பிள்ளை | 28 அக்டோபர் 1989 | ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமலா, ஸ்ரீவித்யா, ஜெய்ஷ்ங்கர், நிழல்கள் ரவி | ராஜசேகர் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]