தமிழ், தெலுங்கு சினிமாவில் குறிப்பிடத்தகுந்த வகையில் நடித்துவரும் Megha Akash தனது காதலனும், அரசியல்வாதியின் மகனுமான சாய்விஷ்ணு உடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.
2017 -ல் Lie என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான Megha Akash பின்னர் பேட்ட படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து வந்தா ராஜாவாக தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, குட்டி ஸ்டோரி, சிங்கள் சங்கரும், ஸ்மார்ட் போன் சிம்ரனும், யாதும் ஊரே யாவரும் கேளீர், வடக்குப்பட்டி ராமசாமி, சபா நாயகன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

குறைவான படங்கள் நடித்திருந்தாலும், ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் அறிமுகமாகி, என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும், வந்த ராஜாவாக தான் வருவேன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். சிவா, சந்தானம், அசோக் செல்வன் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனி, விஜய் மில்டன் கூட்டணியில் ” மழை பிடிக்காத மனிதன்” படத்திலும் குறிப்பிடத்தகுந்த கேரக்டரில் நடித்திருந்தார்.
பெரிய அளவில் இவரது படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் ரசிக்கும் படியான நடிகையாக படத்திலும், சமூக வலைத்தளத்திலும் இருந்து வந்தார்.
28 வயதே ஆன Megha Akash தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நீண்ட நாள் காதலரும், பிரபல அரசியல்வாதி மகனுமான சாய்விஷ்ணு என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்ததை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒருபக்கம் சோகத்தில் இருந்தாலும் ரசிகர்கள், பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 6 வருடங்களாக காதலித்து வருவதாகவும், இவர்கள் இணைந்து “பேசினால் போதும் அன்பே” என்ற ஷார்ட் பிலிம் நடித்தும் உள்ளனர்.
இவர்களின் நிச்சயம் கோவளம் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் உள்ள நித்ய பெருமாள் என்ற கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் மிக எளிமையாக, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்றுள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படத்தை வெளியிட்டு “என்னுடை ‘விஷ்’ உண்மையாகிவிட்டது. இனி என்றென்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என்றும் பதிவிட்டிருந்தார்.
இருவருக்கும் திருமணம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com