2017 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து பிரபலமான பல கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை மேகா ஆகாஷ். முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்த இவர், சினிமாவில் பெரிதாக எந்தவிதமான கிசுகிசுக்களும் இல்லாமல் இருந்தவர்.

தற்போது Megha Akash தன்னுடைய நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவை மணமுடித்தார். செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் ஒரு நட்சத்திர விடுதியில் இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்பந்தத்துடன் நடந்தது. இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.
காதலனோடு கை கோர்த்த Megha Akash… நிச்சயதார்த்தம் முடிந்தது, விரைவில் டும் டும் டும்…
மேகா ஆகாஷின் கணவன் சாய் விஷ்ணு யார்?
Megha Akash மற்றும் சாய் விஷ்ணு இருவரும் 10 வருடங்களாக நண்பர்களாக இருந்துவந்த நிலையில், 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஒரு சில ஆண்டுக்கு முன் நடிகை மேகா ஆகாஷ் உடைய ரகசிய காதலர் யார் என்ற கேள்வி எழுந்தது.

அனால் இருவீட்டாரின் ஒப்புதலுடன் இருவரும் எந்த வித ரகசியமில்லாமல் காதலித்து வந்தனர். சாய் விஷ்ணு பிரபல அரசியல்வாதியான திரு. திருநாவுக்கரசு அவர்களின் மகன் ஆவார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இவர்களின் உறவு பற்றியும், முதல் முறை தன்னுடைய காதலரின் முகத்தையும் வெளியிட்டார் நடிகை மேகா ஆகாஷ்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]