நடிகர் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் ச. பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் இயல்பான படம் ‘மெய்யழகன்’. ’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார், நடிகர் கார்த்தியின் 27வது படத்தை சூரியா, ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனத்தின் துணையுடன் இயக்கியுள்ளார்.
Keep your hearts open for songs that will transport you into the rooted world of our #Meiyazhagan 🤍🌼
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 29, 2024
Get ready for a celebration of emotions.
ஆகஸ்ட் 31 முதல் இசை | Audio From August 31 ✨#MeiyazhaganFromSep27@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl #Jyotika… pic.twitter.com/crEzlq2Lij
இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. கோவிந்த வசந்தா இசையில் உருவாக்கி வரும் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த செய்தியை 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் X தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு புதிய தகவலை இணையவாசிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த போஸ்டரில் கார்த்தியின் கையில் ‘தோனி’ என்று பச்சை குதியுள்ளதை கண்டுபிடித்து கிரிக்கெட் வீரர் தோனியை வைத்து பதிவுகளை வைரலாகியுள்ளனர்.

‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் 31ம் தேதி கோயம்புத்தூரில் நடக்கவுள்ளது. இதில் நடிகர் கார்த்தியின் அன்னான் மற்றும் அண்ணியும் படத்தின் தயாரிப்பாளர்களுமான நடிகர் சூரியா மற்றும் நடிகை ஜோதிகா பங்கேற்பார்கள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. ‘மெய்யழகன்’ படம் செப்டம்பர் 27 வெளியாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]