’96’ படத்தை இயக்கிய இயக்குனர் C. பிரேம்குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தி, அரவிந்த் சுவாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ் கிரண் ஆகியோரை வைத்து ‘மெய்யழகன்’ படத்தை இயக்கியுள்ளார். தஞ்சாவூரில் நடக்கும் ஒரு உணர்ச்சிகரமான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
Experience a life of innocence, joy and many emotions 💖
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 23, 2024
Step into the world of #Meiyazhagan 🤍#MeiyazhaganTrailer | மெய்யழகன் முன்னோட்டம்
▶️ https://t.co/U2DViU6yYY#MeiyazhaganFromSep27 🌾 மெய்யழகன் – புரட்டாசி 11 முதல்@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl… pic.twitter.com/xZ7W3HGylC
‘Meiyazhagan’ படத்தை ஒரு நாவல் கதையாக எழுதிய இயக்குனர் பிரேம்குமார், பின்னர் பலரின் அறிவுரைப்படி இதை படமாக எடுக்க முடிவெடுத்துள்ளார். அப்படி நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி இருவரையும் மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்லும் நபரின் உணர்ச்சிகளும், அவருக்கு அங்கு இன்றளவும் இருக்கும் சொந்தங்களால் ஏற்படும் ஆனந்தம் என மனதுக்கு நிறைவான ஒரு கதையாக தெரிகிறது. இதன் முன்னோட்டத்தில் முக்கியமான சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
அரவிந்த் சுவாமியின் மனைவியாக நடிகை தேவதர்ஷினி, நடிகர் கார்த்தியின் மனைவியாக நடிகை ஸ்ரீ திவ்யா, உறவுக்காரராக ராஜ் கிரண் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா மற்றும் சூரியாவின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

வரும் செப்டெம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ள ‘Meiyazhagan’ படத்தின் முழு விளம்பரங்களும் தமிழில் செய்யப்பட்டது. இப்படத்துக்கு ’96’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]