C. பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் ஸ்வாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘மெய்யழகன்‘. கோவிந்த வசந்தா இசையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் கார்த்தியின் அண்ணனும் படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் சூரியா படக்குழுவுடன் கலந்துகொண்டார்.
Indeed a special night ♥️♥️♥️#Meiyazhagan#MeiyazhaganAudioLaunch#MeiyazhaganFromSep27 pic.twitter.com/hergi64EAn
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 31, 2024
கோயம்பத்தூரில் நடந்த ‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது. இப்படத்தின் ஆறு பாடல்கள் இன்று வெளியானது. திங்க் மியூசிக் இந்தியா சேனலில் இப்பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.
முதல் பாடலாக ‘போரேன் நான் போரேன்’ பாடலை உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் பாடகர் விஜய் நரேன் இணைந்து பாடியுள்ளனர். உணர்ச்சிகரமான இந்த பாடல் வீட்டை விட்டு வெளியூருக்கு செல்லும் உணர்வை பிரதிபலிக்கும்வண்ணம் அமைந்துள்ளது. எழுத்தாளர் உமா தேவி அவர்கள் இப்பாடல் வரிகளை இயற்றியுள்ளார்.

இரண்டாவது பாடல், ‘டெல்டா கல்யாணம்’ ஒரு கல்யாண பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் திருமணத்தின் விருந்தோம்பல், சமையல், விருந்தினர் உபசரிப்பு பற்றிய துள்ளலான பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலை பிரபல நாட்டுப்புற பாடகர்கள் V. M மகாலிங்கம் மற்றும் செந்தில் கணேஷ் உடன் கோவிந்த வசந்தா பாடியுளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் கமல் ஹாசன் பாடியுள்ளார்!
‘ஊர் மண்ணே’ மூன்றாவது பாடலாக வெளியாகியுள்ளது. ஒரு மிருதுவான மெலடி பாடலை பிரபல பாட்டுக்கள் விஜய் பிரகாஷ் தன்னுடைய தேன்குரலில் பாடியுள்ளார். கேட்கவே நெருடலாகவும் இனிமையாகவும் அமைந்துள்ள இப்பாடல் கண்டிப்பாக பலரின் இரவு பயணங்களின் ஒரு பகுதியாக இருக்கும்.
‘யாரோ இவன் யாரோ’ என்ற பாடலுக்கு நடிகர் காலம் ஹாசனின் உருக்கமான குறள் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது. கோவிந்த் வசந்தாவின் பேஸ் பின்னணி இசை பாடலுக்கு வலுசேர்த்துள்ளது. படத்தில் உணர்ச்சிகரமான பகுதியில் கமல் ஹாசனின் நேர்த்தியான உச்சரிப்பு பலரின் மனங்களை தொடும்.
‘வெறி’ பாடல் குதூகலமான குத்து பாடலாகும். ஜல்லிக்கட்டு களத்தில் இருக்கும் உணர்வை தர வெறித்தனமான பாலாக உருவாகியுள்ள இப்பாடலை மீண்டும் நாட்டுப்புற பாடகர் V. M மகாலிங்கம் தன்னுடைய நேர்த்தியான குரலில் பாடியுள்ளார். இவருடன் சூப்பர் சிங்கர் பாடகி அருணா பாடியுள்ளார்.

‘அருள் மெய்’ பாடலை இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவே பாடியுள்ளார். அவரின் இனிமையான குரலில் இயல்பான மெலடியாக பாடியுள்ளார். மொத்தத்தில் பெரும்பாலான பாடலுக்கு கவிஞ கார்த்திக் நேத்தா வரிகள் கொடுத்துள்ளார். இரண்டு பாடல்களுக்கு கவிஞர் உமா தேவி எழுதியுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]