நடிகர் கார்த்தி, அர்விந்த் சுவாமி ஆகியோரின் நேர்த்தியான நடிப்பில் மனதை வருடும் ஒரு நல்ல படமாக வெளிவந்த படம் ‘மெய்யழகன்’. தஞ்சாவூரில் தொடங்கும் கதை, எப்படி சொந்த ஊரை விட்டு பிரிந்து, உறவுகள் உற்ற சொந்தங்களை பிரிந்துள்ள உணர்வை மிக எளிமையாக திரையில் காட்டினார் இயக்குனர் C. பிரேம்குமார்.

‘மெய்யழகன்’ படத்தின் முதல் பாதியில் பல சுவாரசியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் கள்ள கபடம் இல்லாத பாசம், முக்கியமாக நாம் அனைவருக்கும் பரிட்சயமான நக்கல் கலந்த நகைச்சுவை என அழகாக படத்தை தொடங்கினார்கள். இரண்டாம் பாதியில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமியின் கதாபாத்திரங்கள் மட்டுமே உரையாடுவது மட்டுமே திரைக்கதை என்பதால் பார்வையாளர்கள் விமர்சனத்தில் சில காட்சிகளை தவிர படத்தின் போக்கு நன்றாக இருந்தது என தெரிவித்தனர்.
இரண்டாம் பாதியில் கார்த்தியின் கதாபாத்திரம் அவரின் வீட்டில் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளை பற்றியும், அவரின் ஊருக்கு பின்னல் உள்ள வரலாறு, கரிகால சோழன் தொடுத்த போர், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆகிய காட்சிகளை படத்தில் இருந்து நிக்கியுள்ளதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட மெய்யழகன் ஜல்லிக்கட்டு காட்சிகள்
இன்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளை மாடுகளை தங்களின் வீட்டில் ஒரு உறுப்பினராக பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி மெய்யழகன் படத்திலும் நடிகர் கார்த்தியின் பாத்திரம் வளர்க்கும் காளை பற்றியும், எப்படி வருடாவருடம் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆர்வமாக அந்த காளையை கூட்டி செல்வத்தையும் சொல்லுவார்.
அப்படி ஜல்லிக்கட்டு தடையின் பொது நடக்கும் ஒரு காட்சியை தற்போது நீக்கியுள்ளார்கள். இந்த காட்சியை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2D Entertainment சேனலில் பதிவிட்டுள்ளார்கள். இப்போது இந்த படத்தின் நேரம் 2 மணி 38 நிமிடங்களாக திரையிடப்படுகிறது.
சமூக வன்கொடுமை காட்சிகள்
தன்னுடைய அத்தானுடன் போதையில் அவர் மிகவும் பற்றாக நினைக்கும் சமூக மாற்றங்கள் நடக்காமல் இருப்பதையும், அரசியல் காரணங்களால் நடந்த வன்கொடுமைகள் பற்றி பேசி உருக்கமான காட்சியாக இது இருந்தது. நடிகர் கார்த்தியின் கதாபாத்திரம் இப்படத்தில் மனமுருகி அழுகும் காட்சிகள் சிலவற்றில் இதுவும் ஒன்று.
படத்தின் தொடக்கத்திலேயே கார்த்தியின் பாத்திரம் கதையை தூக்கி பிடிக்கும் என தெரியவந்தாலும் எளிமையான ஒரு கதாபாத்திரமாக படம் முழுவதும் பயணிக்கிறார். கருப்பு கோடி போராட்டம், வீட்டில் பெரியார் புகைப்படம் என அங்கங்கே இவரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் வெளிப்படுத்து இருந்தாலும், இந்த காட்சியில் அவர் முற்றிலும் மனம் திறந்து அவற்றை பேசியது இயல்பாக நடக்கும் ஒரு காட்சியாகவே அமைந்தது.
ஜல்லிக்கட்டு காட்சி
‘மெய்யழகன்’ படம் அறிவிக்கபட்டபொது வெளியிடப்பட்ட முதல் அறிவிப்புகளில் ஒன்று நடிகர் கார்த்தி, ஜல்லிக்கட்டு களத்தில் மாட்டவிழ்க்கும் பரணையில் நிற்பது தான். மதுரையில் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அவரின் காளை சிறி பாயும் பிரம்மிப்பான காட்சிகள் திரையரங்கில் பார்ப்பதற்கு கம்பிரமாக இருந்தது.

இந்த மூன்று காட்சிகளும் இரண்டாம் பாதியில் அமைந்துள்ளதால், கதையின் போக்கை புரிந்துகொள்ள மிகவும் முக்கியமான காட்சிகள் என்பதாலும் படக்குழுவில் இயக்குனர் பிரேம்குமாரை தவிர வேறு யாருக்கும் இந்த காட்சிகளை நீக்குவதில் அபிமானம் இல்லை என்றும், குறிப்பாக இணை தயாரிப்பாளர் நடிகர் சூரியா இந்த காட்சி நீக்கத்துக்கு முதலில் சம்பந்திக்கவில்லை என இயக்குனர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறினார்.
The way Karthi looks at the police, and how Govind Vasantha elevates the scene through the background score. This is cinema! #Meiyazhagan 🫡❤️@Karthi_Offl pic.twitter.com/smh7pKI2XV
— Karthi Tweets ! (@Karthi__Tweets) October 2, 2024
மெய்யழகன் படத்தின் கதை தமிழ் சினிமாவில் திரைப்படமாக வெளியாகவேண்டும் என்று நடிகர் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி இருவரும் கருதி, அதனால் தான் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தனர். இப்படி அனைவரும் மனம் விரும்பி ஒரு நல்ல கதையை திரையிட முடிவெடுத்து அதில் இப்படியொரு மற்றம் என்பது ஏற்கமுடியாத காரணமாக படக்குழுவினருக்கு தெரிந்துள்ளது.
சமீபத்தில் GOAT படத்திலும் அதிக நீளம் காரணமாக சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இயக்குனர் பிரேம்குமார், ‘மெய்யழகன்’ படத்தை பார்த்து எழுந்த சில அக்கறை குரல்களுக்கு பதிலாக தான் இந்த நேரக் குறைப்பு என தெரிவித்துள்ளார். இந்த படத்தின் Uncut version அதாவது நேரம் குறைப்பதற்கு முன் இருந்த முழு படைப்பையும் OTT யில் வெளியிடும்படி இப்படத்தின் ரசிகர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]