Home Cinema News ‘Mic’ Mohan- ன் வியப்பான திரைப்பயணம்! 

‘Mic’ Mohan- ன் வியப்பான திரைப்பயணம்! 

நடிகர் Mohan தமிழ் சினிமாவில் ‘வெள்ளி விழா நாயகனாக’ கோலாச்சியவர். இவர் 2024ல் ஹரா மற்றும் G.O.A.T படங்களில் comeback கொடுத்துள்ளார்!

by Vinodhini Kumar

‘Mic’ Mohan இல்லாமல் 80கள் மற்றும் 90களில் படங்களே இல்லை என்பதை போல் தொடர் வெற்றிப் படங்களை தந்தார். இவரின் திரைப்பயணம் தொடக்கம் முதல் இப்போது வரை சுவாரசியமான ஒன்றாக அமைந்துள்ளது. மைசூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து சினிமா மீது எந்தவித கனவுகள் இல்லாமல் படித்து முடித்து வங்கியில் வேலைக்கு செல்லும் தெளிவான திட்டத்தோடு இருந்தவர். ஒரு துணை இயக்குனரின் கண்ணில் பட வாழ்க்கையின் பாதையை மாற்றி, தமிழ் மக்கள் மனதில் மைக் மோகனாக உயர்ந்தார். 

மோகன்- பாலு மெகேந்திரா கூட்டணி

Dir. Cinematographer Balu Mahendra

கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் படம் பார்த்து ஒரு ஹோட்டலில் எதர்சையாக துணை இயக்குனர் ஒருவர் இளம் மோகனை பார்த்து புதிய இயக்குனர் ஒருத்தரின் படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்க சினிமாவில் நடிப்பதை பற்றி துளியும் நினைப்பில்லாத மோகனுக்கு மாற்றம் பிறந்தது. அந்த உதவி இயக்குனர் குறிப்பிட்ட புது இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள்! 

Actor Mohan

கன்னடத்தில் தன்னுடைய முதல் படத்தில் (கோகிலா) கமல் ஹாசனுடன் நடிகர் மோகன், ஷோபா நடிக்க இயக்கினார் பாலு மகேந்திரா. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழிலும் நூறு நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது ‘கோகிலா’. இந்த படத்தில் புதுமுக நடிகர் Mohan அர்ப்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து வாய்ப்புகள் பெற தொடங்கினார். ஆனால் வங்கியில் கிடைத்த வேலையை விடாமல், சினிமாவில் தொடர நம்பிக்கை இல்லாமல் வங்கி மேலாளரிடம் விடுப்பு வாங்கி தான் அடுத்த படத்தில் நடித்தாராம். இயல்பாக எதிர்காலத்தை நினைத்து உருவாகும் கவலை மோகனையும் விடவில்லை. ஆனால் அவரின் வாழ்க்கையின் திட்டம் அவரின் கவலையை சுவடில்லாமல் மறைத்து அவரை புகழின் உச்சியில் நிறுத்தியது. 

“இயக்குனர்களுக்கு இடையிலும், நடிகர்களுக்கு இடையிலும் எவ்வித போட்டியும் இல்லை. படத்தின் கதை தான் வெற்றியை தீர்மானிக்கும்” 

Actor Mohan

என்னதான் படத்தின் கதை அதன் வெற்றியை தீர்மானிக்கும் என்றாலும் நடிகர் மோகன் நடித்த படங்கள் அனைத்தும் வெள்ளி விழா கொண்டாடியது, அவரின் கால்ஷீட் கிடைக்க இயக்குனர்கள் காத்திருந்தது, இரவு பகலாக அயராது படப்பிடிப்பில் இருந்ததும் அவர் கூறிய வாக்கை மாற்றி சிந்திக்க வைக்கிறது. 

Moodupani Poster

கன்னடத்தில் முதல் படத்தில் நடிப்பதற்கு முன் பிரபல நாடக கலைஞர்களான கிரீஷ் கர்ணாட், பால்யா லங்கேஷ் என பெரிய திறமையான எழுத்தாளர்கள் உடன் நாடகங்களில் நடித்தார். ஆனால் அப்போது கூட சினிமா ஆசை அவருக்கு இல்லையாம். பாலு மகேந்திராவின் படங்களில் நடித்த பின் சினிமாவை தொழிலாக தொடர முடிவெடுத்து 1980ல் ‘மூடுபனி’ படத்தில் நடித்தார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகி 200 நாட்கள் திரையில் ஓடியது. அடுத்ததாக இயக்குனர்/எழுத்தாளர் மகேந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் முக்கோண காதல் கதையில் நடித்திருப்பார் நடிகர் மோகன். இதுவும் 200 நாட்கள் திரையரங்குகளில் ஓடி, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது. இயக்குனர் ஆர். சவுந்தரராஜன் உடன் ‘பயணங்கள் முடிவதில்லை’ 

Mouna Ragam Mohan Revathi

1986ல் மணிரத்னம் இயக்கிய ‘மௌன ராகம்’ படத்தில் தன்னுடைய அசராத, தெளிவான நடிப்பால் பெண்கள் மனதில் காதல் மன்னனாக இடம்பிடித்தார்‌. அடுத்த வருடத்திலேயே பாலு மகேந்திரா இயக்கத்தில் ‘இரட்டைவால் குருவி’ படத்தில் தனது மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவளையும் மனமுடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தார். முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரங்களை இயக்குனர் மற்றும் கதையை நம்பி நடித்து, அதிலும் வெற்றி கண்டவர். 

Gopurangal Saivathillai

நடிகர் Mohan என்றால் காதல் நாயகனாக, மைக் பிடித்து உருகி உருகி பாடும் வேடங்கள் நினைவில் இருந்தாலும், ‘கோபுரங்கள் செய்வதில்லை’, ‘டிசம்பர் பூக்கள்’, ‘நூறாவது நாள்’ ஆகிய படங்களில் எதிர்பார்க்காத வேடத்தில் நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் காதல் படங்கள் மட்டுமல்லாமல் த்ரில்லர், ஆக்ஷ்ன் என வெவ்வேறு கதைகளில் நடித்துள்ளார். 

S.N Surendar

அதிகபடியாக நடிகர் மோகனுடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா. எல்லா ஹீரோயிற்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தாலும் இந்த நடிகைகளுடன் அதிக படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் மற்றுமொரு மறக்கமுடியாத ஜோடி Mohan- S. N. சுரேந்தர் தான். நடிகர் மோகனின் குறளாக பல ஆண்டுகளாக இருந்தவர் பாடகர் S.N சுரேந்தர் அவர்கள். அதே போல் பெரும்பாலான இளையராஜா -மோகன் கூட்டணி படங்கள் பட்டித்தொட்டி எங்கும் வெற்றியை தேடியது. 

1990களில் சற்றே கம்மியான படங்களில் நடித்து வந்த நடிகர் மோகன், அப்போதும் புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். ஒரு பெரிய இடைவேளைக்கு பின் தற்போது ஹரா படத்தில் நடித்துள்ளார். அப்படியே விஜய் நடிக்கும் G.O.A.T படத்திலும் நடித்துள்ளார். 

‘Mic’ Mohan என்ற பெயர் வர காரணம்

Mic Mohan

பெரும்பாலானவர்கள் நினைப்பதை போல் மோகன் பல படங்களில் மைக் வைத்து பாடும் காட்சிகள் இல்லை. ஆனால் அவரின் உணர்ச்சிகரமான நடிப்பாலும், கச்சிதமான வாய் அசைவினாலும் அவரே மைக் பிடித்து பாடுவது போல் மக்களை நினைக்கவைத்தது தான். அதிலும் SP பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் மோகன் பட பாடல்கள் அனைத்தும் ஹிட். பாடகர் SPBயே, ‘நடிகர் மோகனைப் போல் தன்னுடைய பாட்டுக்கு உயிரூட்டும் நடிகர் இல்லை’ என கூறியிருப்பார். 

80கள் தொடங்கி 2024 வரை நடிகர் மோகனின் ரசிகைகளும் குறையவில்லை, அவரின் எளிமையான தன்மையும் மாறவில்லை. சினிமா என்பது தன்னுடைய தொழில் மட்டுமே, அதை தாண்டி வாழ்க்கையில் முக்கியமானது நிறைய உள்ளது என ஓப்பனாக சமீபத்தில் நேர்காணலில் கூறிய நடிகர் மோகனின் எதார்த்தம் இந்த காலத்து நடிகர்களுக்கு புதிய கண்ணோட்டமா அமையும். அவரின் புதிய பரிமாணத்தை 2024ல் இருந்து தொடங்குகிறார், இதுவும் முன்பு இருந்தபடி வெற்றிகளை குவிக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் உள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.