தான் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் கொண்டதும் விதமாகவும்,வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டவர் இயக்குனர் MOHAN RAJA …
எடிட்டர் மோகன் அவரின் மகனாக திரையுலகில் அறிமுகமான ராஜா தான் இயக்கிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்ற இடத்தை உருவாக்கினார். காதல், காமெடி, ஆக்சன், திரில்லர் என ஒவ்வொரு படத்திலும் தன்னை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டார். கிட்டத்தட்ட தான் இயக்கிய அனைத்து படங்களும் ரசிக்கும்படியாக அமைத்தது.
ஜெயம்

2003-ல் MOHAN RAJA மற்றும் தனது தம்பி ஜெயம் ரவி இருவரும் தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். அறிமுக படத்திலேயே இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கல்லூரி மாணவனாக ஜெயம் ரவி, சதா கோபி சந்த் என புது முக நடிகர்களை கொண்டு வெற்றி கண்டது படம். ஜெயம் ரவி, சதா இருவருக்குமான காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. “கோடி கோடி மின்னல்கள்”, “கவிதையே தெரியுமா”, “திருவிழான்னு வந்தா”, “வண்டி வண்டி ரயிலு வண்டி” என அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.
எம். குமரன் S/O மஹாலட்சுமி

ஜெயம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் அடுத்த படம் எம். குமரன் S/O மஹாலட்சுமி. அம்மா மீது வைத்துள்ள பாசத்தை அழகாக படத்தில் காட்டியிருப்பார். ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக் ஆகியோர் நடிப்பில் வெளியானது படம். பாக்ஸிங்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஜெயம் ரவியின் அப்பாவான பிரகாஷ் ராஜ் உடன் பேசும் ஒரு சில காட்சிகளில் ரசிக்க வைத்திருப்பர். நதியா 10 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் காம்பேக் தந்த படம் இது. ” சென்னை செந்தமிழ்”, “ஐயோ ஐயோ”, “நீயே நீயே” போன்ற பாடல்கள் ரசிக்கும் படியாக இருந்தது.
உனக்கும் எனக்கும்

ஜெயம் ரவி, திரிஷா, பிரபு, மணிவண்ணன், பாக்கியராஜ் ஆகியோர் நடித்து வெளியான படம் உனக்கும் எனக்கும். சாதாரண கிராமத்தில் பிறந்த திரிஷா தனது தோழியின் திருமணத்திற்கு சென்ற பொது ஜெயம் ரவியை சந்திக்கிறார். குறும்பு தனம் செய்யும் ஜெயம் ரவி மீது திரிஷாவிற்கு காதல் ஏற்படுகிறது. ஜெயம் ரவியின் அம்மா இதற்க்கு தடையாக இருந்து திரிஷாவை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார். தனது காதலை நிரூபிக்க ஜெயம் ரவி விவசாயம் செய்து, பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இறுதியில் இருவரும் சேர்ந்ததை அழகாக காட்டியிருப்பார். “சம்திங் சம்திங்”, பூ பொறிக்க நீயும் போகாதே’, “உன் பார்வையில்”, “கோழி விடை கோழி” என பாடல்கள் ஹிட் அடித்தது.
சந்தோஷ் சுப்பிரமணியம்

அப்பா மகன் உறவை மிக அழகாக காட்டியிருப்பார் இயக்குனர். பிரகாஷ் ராஜ் அப்பாவாக சில இடங்களில் பேசும் வசனம் நிஜ வாழ்வில் அப்பாவாக அறிவுரை கூறுவதை போல இருக்கும். ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ் ராஜ், சந்தானம், பிரேம் ஜி ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட் ஆனா படம். ஜாலியான கல்லூரி மனைவியாக ஜெனிலியா எதார்த்த நடிப்பை காட்டியிருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் அப்பா மகன் உறவை பற்றி ஜெயம் ரவி பேசும் வசனம் கண்ணீர் வர வைத்தது.
தில்லாலங்கடி

ரவி, தமன்னா, சந்தானம், வடிவேல், ஷாம் நடிப்பில் காமெடியாக எடுக்கப்பட்ட படம் தில்லாலங்கடி. ஜெயம் ரவி தனது மன திருப்திக்கு செய்யும் சில சம்பவங்கள் பயங்கரமாக இருக்கும். போலீஸ் ஆபிஸராக ஷாம் சிறப்பாக நடித்திருப்பார். சந்தானம், ஜெயம் ரவி, வடிவேல் காமெடி ரசிக்கும்படியாக இருக்கும்.
வேலாயுதம்

விஜய்யின் சினிமா வாழ்வில் ஒரு சில படங்கள் தொடர்ந்து சொதப்பிய நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில் 2011- ல் வெளியான வேலாயுதம் படம் விஜய்க்கு நல்ல வரவேற்பை தந்தது. விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சந்தானம், சூரி, சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டிகேட்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஹீரோ தான் என ரசிக்கும்படி படத்தை எடுத்திருப்பார் இயக்குனர்.
தனி ஒருவன்

2015-ல் வெளியாகி இந்தியா சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தனி ஒருவன். இந்த மாதிரியான கதையை படமாக்க முடியுமா என அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார் மோகன் ராஜா. ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, தம்பி ராமய்யா, நாசர், வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்திருந்தனர். அரவிந்த் சாமி சித்தார்த் அபிமன்யூவாக கலக்கியிருப்பார். இந்த கேரக்டர் ஹீரோவிற்கு இணையாக பேசப்பட்டது. சித்தார்த் அபிமன்யூ என்ற ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு மிக அழகாக கதையை எடுத்திருப்பார்.
வேலைக்காரன்

2017-ல் சிவகார்த்திகேயன், பகத் பாஃசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், சதீஸ், விஜய் வசந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் வேலைக்காரன். தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்யும் நிறுவனங்கள், அந்த ஆபத்தை உணராத மக்கள், நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் என ஒவ்வொரு ஆபத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார். பகத் பாஃசில் வரும் காட்சிகளில் அவரை மட்டும் பார்த்து ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கிளைமேக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத விதமாக மாறுபட்ட சிந்தனையில் எடுத்திருப்பார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]