நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சூக்குமார் கூட்டணியில் 2019 ம் ஆண்டு வெளியான ‘Lucifer’ படம் அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக ‘L2: Empuraan’ படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் அதை எண்ணி ஆவலுடன் காத்திருந்தனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தாக ‘L2: Empuraan’ திரைப்படம் மார்ச் 27 கேரளாவில் மட்டும் அல்லாமல், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் மிக பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு அர்த்தராத்திரி சப்ரைஸ் கொடுத்த இந்த ட்ரெய்லர், இணையத்தை கலக்கி வருகிறது. இந்த ட்ரைலரில் வரும் மாஸான அதிரடி காட்சிகள், பிரமாண்டமான பின்னணி இசை, நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
Read More: நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ‘Trauma’ படத்தின் ட்ரைலர் வெளியானது!
இப்படத்தில், நடிகர் மோகன் லால் மற்றும் பிருத்விராஜ் இணைந்து அதிரடி ஹீரோக்களாக கலக்கியிருக்கிறார்கள். ட்ரைலர் மட்டுமே 3 நிமிடம் 50 வினாடிகளுக்கு வெளியாகியுள்ளது. ‘L2: Empuraan’ படம் முழுவதும் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்து 3 மணி நேர படமாக வெளியாகவுள்ளது.
09:00 IST on the 21st of March 2025..the floodgates to the world of #EMPURAAN will open!
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 20, 2025
Grab your tickets fast! All India bookings opening tomorrow morning 09:00 IST!#L2E Trailer Out Now:
Malayalam – https://t.co/9k4Tun4btX
Hindi – https://t.co/jOyntebcbg
Tamil -… pic.twitter.com/NRVvCNWSic
அரசியல் சூழ்ச்சிகளை தகர்த்தெறிந்து, நாட்டை காப்பாற்ற அதிரடியாக போராடும் சக்தி வாய்ந்த கதைக் களத்தைக் கொண்டு ‘L2: Empuraan’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் ‘Lucifer’ படத்தின் நேரடி தொடர்ச்சியாக உள்ளது. திரையரங்க அனுபவத்தில் ஆக்ஷன்கள் நிறைந்த காட்சிகளுடன் ‘L2: Empuraan’ படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் ‘L2: Empuraan’ படம் அமையும் என எண்ணப்படுகிறது.
‘L2: Empuraan’ படக்குழு
நடிகர்கள் | மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், சச்சின் கெடேகர், பாசில், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், ஜெரோம் ஃபிலிப், இந்திரஜித் சுகுமாரன் |
இயக்குனர் | பிருத்விராஜ் சுகுமாரன் |
இசையமைப்பாளர் | தீபக் தேவ் |
தயாரிப்பாளர்கள் | ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன். |
தயாரிப்பு நிறுவனம் | Sree Gokulam Movies , Aashirvad Cinemas Pvt Ltd |
வெளியீட்டு தேதி | 27 மார்ச் 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]