இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா அம்மனாக முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜைகள் போடப்பட்டு இன்று பிரமாண்டமாகத் துவங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பு பூஜை விழாவில் நடிகர் ரவி மோகன், சதீஷ்குமார், நடிகை குஷ்பு சுந்தர் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் யோகி பாபு, மற்றும் நடிகை மீனா, துனியா விஜய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள். மேலும், இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை சங்கீதா, அபிநயா, நடிகர் சதீஷ்குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரணமாகத் தனது திரைப்படப் பூஜைகளில் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா, இந்த முறை தனது புதிய திரைப்படமான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத் துவக்கப் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பங்காற்றினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இவர் தனது பக்தி உணர்வை வெளிப்படுத்து விதமாக, சிகப்பு நிறப் புடவை அணிந்து அழகாகக் காட்சியளித்தார்.
The vibes are filled with divine power and grace. ✨💖
— Vels Film International (@VelsFilmIntl) March 6, 2025
The magical and inspiring ladies #Nayanthara #Kushboo and #Meena have kickstarted the #MookuthiAmman shoot with grace and divinity. 🔥‼️🙌 pic.twitter.com/nJKZk08l0K
‘மூக்குத்திஅம்மன் 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஐஷிரி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் பேசும் போது, “இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால், கடத்த ஒரு மாத காலங்களாக அவர் விரதத்தில் இருந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக தயாராகியுள்ளார்” என இப்படத்திற்காக நடிகை நயன்தாராவின் பங்களிப்பையும், “மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் 100 கோடி மதிப்பிலான பட்ஜெட்டுடன் பிரமங்கமாக தயாராகவுள்ளது” எனவும் அறிவித்துள்ளார்.
இப்படம் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா மற்றும் ஆர்ஜே பாலாஜி இணைந்து நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் தொடர்ச்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் ஒரு பிரமாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தரும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழுவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் வாழ்த்து
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தயாரிப்பாளரான ஐஷிரி கணேஷ்க்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்த்துகளுடனும், ஆசீர்வாதத்துடனும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாகத் துவங்கியுள்ளது. அதைப் போல் உலகநாயகன் கமல்ஹாசனும் படக்குழுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு
நடிகர்கள் | நயன்தாரா, மீனா, துனியா விஜய், யோகி பாபு, தம்பி ராமையா, சதிஷ் குமார், அபிநயா, ரெஜினா கேசாண்ட்ரா |
இயக்குனர் | சுந்தர் சி |
தயாரிப்பாளர் | ஐஷிரி கணேஷ் |
தயாரிப்பு நிறுவனம் | Vels Film International |
இசையமைப்பாளர் | ஹிப்ஹாப் ஆதி |
வெளியீட்டு தேதி | TBA |
Read More – ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம் என அறிவித்த நடிகை நயன்தாரா!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]