Home Cinema News அதிக முறை தேசிய விருதை வென்ற ஆஸ்கர் நாயகன் AR. Rahman…

அதிக முறை தேசிய விருதை வென்ற ஆஸ்கர் நாயகன் AR. Rahman…

இந்திய சினிமா முதல் உலக சினிமா வரை சென்று ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இசைப்புயல் AR. Rahman இது வரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார். 

by Sudhakaran Eswaran

இந்திய சினிமா முதல் உலக சினிமா வரை சென்று ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இசைப்புயல் AR. Rahman இது வரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார். 

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்க்கு சென்று தனது இசையால் அனைவரையும் மயங்க வைத்தவர் AR. Rahman. 2009-ல் வெளியான “ஸ்லம்டாக் மில்லியனர்” என்ற படத்தில் இடம்பெற்ற Jai Ho பாடல் மூலம் AR. Rahman -க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.  

image 38

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் அறிமுகமான AR. Rahman முதல் படத்திலேயே தேசிய விருது, பிலிம்ப்ர், தமிழ்நாடு அரசு விருது என பல விருதுகளை வாங்கி குவித்தார். தொடர்ந்து தனது இசையால் கலைமாமணி, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகளை வாங்கினார்.  

image 39

தான் இசையமைத்த பாடல்கள், பாடிய பாடல்களுக்கு தேசிய விருது, பிலிம்பேர், IIFA விருது, கிராமி விருது, தமிழ்நாடு அரசு விருது, விஜய் அவார்ட்ஸ், மிர்ச்சி மியூசிக், ஜீ சினி விருது, ஸ்க்ரீன் விருது என இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் சேர்த்து 175 விருதுகளை பெற்றுள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில் AR. Rahman -க்கு பொன்னியின் செல்வன் 1 படத்திலிருந்து சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றதன் மூலம் 7 தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

Kollywoodglam 3 7

இதற்க்கு முன்பு அறிமுக படமான ரோஜா படத்திற்கு முதன் முதலில் தேசிய விருதை பெற்றார். அதை தொடர்ந்து மின்சார கனவு படத்திற்கும், கன்னத்தில் முத்தமிட்டாள், காற்று வெளியிடை மற்றும் ஹிந்தியில் லகான் போன்ற படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார். 

Kollywoodglam 4 4

பொன்னியின் செல்வன் 1, மற்றும் ஹிந்தியில் MOM படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. Rahman பெயர் இதுவரை 7 முறை பரிந்துரை செய்யப்பட்டு, 7 முறையும் தேசிய விருதை பெற்றுள்ளார். 

Kollywoodglam 5 2

AR. Rahman 7 முறை தேசிய விருதையும், அதற்க்கு அடுத்து இளையராஜா 5 முறையும், ஹிந்தி இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ்  4 முறையும், ஜெய்தேவ் 3 முறையும் தேசிய விருதை பெற்றுள்ளனர். 

AR. Rahman வென்ற தேசிய விருது பட்டியல்:

படங்கள்   வெளியான தேதி இயக்குனர்கள்   நடிகர்கள்விருது விவரம் 
ரோஜா (தமிழ் )   15 ஆகஸ்ட் 1992மணிரத்னம்அரவிந்தசாமி, மதுபாலா, நாசர், ஜனகராஜ், சிறந்த இசை இயக்கம்
மின்சார கனவு  (தமிழ் )14 ஜனவரி 1997 ராஜிவ் மேனன் அரவிந்தசாமி, பிரபு தேவா, கஜோல், நாசர், VK. ராமசாமி சிறந்த இசை இயக்கம்
லகான்  (ஹிந்தி ) 15 ஜூன் 2001 அசுதோஷ் கோவாரிகர்அமீர் கான், க்ராசி சிங்க், சுஹாசினி முலே, ராஜேந்த்ரா குப்தாசிறந்த இசை இயக்கம்
கன்னத்தில் முத்தமிட்டாள்   (தமிழ் )14 பிப்ரவரி 2002  மணிரத்னம் மாதவன்,  சிம்ரன்,PS. கீர்த்தனா, நந்திதா தாஸ்சிறந்த இசை இயக்கம்
  காற்று வெளியிடை  (தமிழ் )   7 ஏப்ரல் 2017மணிரத்னம்கார்த்தி, அதிதி ராவ், ருக்மணி விஜயகுமார், RJ. பாலாஜி, டெல்லி கணேஷ் சிறந்த இசை இயக்கம்
MOM (ஹிந்தி ) 7 ஜூலை 2017 ரவி உத்யாவார்ஸ்ரீதேவி, அக்ஷயி  கன்னா, சாஜால் அலி, அபிமன்யூ சிங்க், ராஜஸ்ரீ தேஸ்பாண்டே சிறந்த பின்னணி இசை
  பொன்னியின் செல்வன் 1 (தமிழ் )30 செப்டம்பர் 2022 மணிரத்னம்விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் சிறந்த பின்னணி இசை

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.