அறிமுக இயக்குனர் நிரஞ்சன் இயக்கும் “Mr.Bhaarath” திரைப்படத்தில் Finally பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் அறிவிப்பு காணொளி இன்று வெளியானது. இதற்கு முன், இதே தலைப்பில் நடிகர் ரஜினி மற்றும் சத்யராஜ் நடித்த “Mr.பாரத்” திரைப்படம் 1986 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.
புதுவிதமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்களின் “G Squad”. இந்த நிறுவனத்தின் முதல் படம் “Fight Club”, உறியடி படத்தில் நடித்த நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. அதன் பிறகு LCU-வில் இணையவுள்ள “Benz” திரைப்படத்தையும் தயாரிக்கிறது G Squad.
Mr.Bhaarath
இன்று இந்த நிறுவனத்தின் மூன்றாவது படமாக வெளியாகவுள்ளது இயக்குனர் நிரஞ்சன் இயக்கும் “Mr.Bhaarath”. இந்த திரைப்படத்தில் Finally என்ற YouTube சேனல் மூலம் பிரபலம் அடைந்த பரத் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இதற்கு முன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் “லவ் டுடே”-வில் ஹீரோவின் நண்பனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“Mr.Bhaarath” அறிவிப்பு காணொளி நகைச்சுவையான பின்னணியில் கடத்தப்பட்ட நண்பனை காப்பாற்ற வரும் நக்கல் பிடித்த நண்பனாக மக்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறார் படத்தின் நாயகன் பரத். மேலும், தயாரிப்பாளர் லோகேஷின் கேமியோ இந்த காணொளிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது எனக் கூறலாம்.
மேலும், முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் பலவிதமான உணர்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு புதுவிதமான முயற்சியாக இந்த படம் அமைய உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் | நிரஞ்சன் |
நடிகர்கள் | பரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் |
இசை | பிரணவ் முனிராஜ் |
தயாரிப்பு | G Squad |