GV Prakash மற்றும் சைந்தவி இருவருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்களா…
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பளாக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கடந்த 2013-ல் தனது பள்ளி தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2020-ல் அன்வி என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது சைந்தவி சம்மதத்துடன் இருவரும் பிரிந்து வாழ போவதாக insta-வில் பதிவிட்டிருந்தார். அதே போஸ்டை சைந்தவியும் பதிவிட்டார். 2023-ல் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் சைந்தவியுடன் இருக்கும் புகைப்படத்தை “love of her life” என்று பதிவிட்டிருந்தார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024
“நண்பர்கள், ரசிகர்கள், மீடியா என அனைவரும் தங்களது இந்த தனிப்பட்ட முடிவை புரிந்து கொண்டு மதிப்பளியுங்கள். எங்கள் சம்மதத்துடன் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளோம். இது சிறந்த முடிவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி.” என ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி பதிவிட்டிருந்தனர்.
கடந்த சில மாதங்களாக பிரிந்து இருக்கும் பிரகாஷ் மற்றும் சைந்தவி தற்போது இந்த முடிவு தெரிவித்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]